Browsing category

Tamil Cinema News

ராமாயணம் படத்தின் முதல் பாடல் ‘ஜெய் ஜெய் ராம்’ வெளியானது!

நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில், கார்த்திக் நேத்தா வரிகளில், சின்மயி ஸ்ரீபதா மற்றும் ஹரிச்சரண் குரல்களில் இப்பாடல் உருவாகியுள்ளது. ஸ்ரீ ராமரைப் போற்றும் பக்திப் பாடலாக உருவாகியுள்ள ‘ஜெய் ஜெய் ராம்’, ஆரத்தியின் ஆன்மீகத் தன்மையையும் திரையிசையின் அழகையும் ஒருங்கிணைக்கிறது. ஸ்ரீ ராமரின் கருணை, பாதுகாப்பு மற்றும் தர்மத்தின் மீதான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. […]

வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் மண்டவெட்டி படத்தின் முதல் சிங்கிள் ராட்சசியே வெளியானது!

சரண்ராஜ் செந்தில்குமார் எழுதி, இயக்கி, தயாரித்துள்ள ‘மண்டவெட்டி’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘ராட்சசியே’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சூப்பர்நேச்சுரல் கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கோமலி பிரசாத் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், தற்போது வெளியாகியுள்ள முதல் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. தேசிய விருது பெற்ற பாடகி வைக்கம் விஜயலட்சுமி உணர்வுப்பூர்வமாக பாடியுள்ள ‘ராட்சசியே’ பாடலுக்கு தீபக் வேணுகோபால் […]

நீண்ட நாட்களுக்குப் பிறகு தனுஷுடன் நடிக்கிறேன் – வடிவேலு மகிழ்ச்சி!

நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று சிறப்பு பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணைவதால், இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. Sithara Entertainments நிறுவனத்தின் நாக வம்சி, Primark Productions நிறுவனத்தின் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனத்தின் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து […]

லவ் அண்ட் வார் படத்தில் ஆலியா பட்டின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம், 2027-ம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது ஆலியா பட்டின் புதிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. இதில் ஆலியா பட் இதுவரை ஏற்றிராத வகையில், நியூ ஜெனரேஷன் கேபரேட் அவதாரத்தில் காட்சியளிக்கிறார். முதல் போஸ்டரில் ஸ்லிட் ஸ்கர்ட் மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் நாற்காலியில் […]

மதுரையில் பூஜையுடன் தொடங்கியது தனுஷின் ‘D56’ படப்பிடிப்பு!

தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷின் ‘D56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர்–இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற சுவாரஸ்யமான அறிவிப்புடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, விஜய் பி. குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மதுரையில் நடைபெற்ற பூஜையைத் தொடர்ந்து, படத்தின் முதல் […]

விறுவிறுப்பாக நடைபெறும் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘கிங் அண்ட் குயின்ஸ்’ படப்பிடிப்பு!

கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் MP தயாரிப்பில் உருவாகி வரும் ‘கிங் அண்ட் குயின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாகவும், ஆதியா பிரசாத் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இளவரசு, பிரகதி, தம்பி ராமையா, ரமேஷ் திலக், சுனில், படூர் ரமேஷ், ‘பூவே உனக்காக’ புகழ் சங்கீதா, அஞ்சலி நாயர், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, நிகிலா ஷங்கர், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் […]

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டிரெய்லர் வெளியானது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. இரு சிறுவர்கள் ரௌடி பத்தாவின் வீரத்தைப் பற்றி பேசுவதுடன் […]

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி பிரியா

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடைபெற்ற சிறப்பு நாமினேஷன் டாஸ்க்கைத் தொடர்ந்து, லட்சுமி பிரியா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். லட்சுமி பிரியா, ஆனந்தி மற்றும் முத்தழகி ஆகிய மூவரில் ஒருவரை வீட்டைவிட்டு வெளியேற்றுவதற்காக தேர்வு செய்யுமாறு பிக் பாஸ், போட்டியாளர்களிடம் அறிவுறுத்தினார். இதையடுத்து போட்டியாளர்கள் தங்களது தேர்வுகளை தெரிவித்தனர். இதில் அதிகபட்ச நாமினேஷன்களை லட்சுமி பிரியா பெற்றதால், அவர் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. லட்சுமி பிரியா வெளியேறத் தயாரானபோது, பிக் […]

லவ் அண்ட் வார் படத்தில் ரன்பீர் கபூரின் மிரட்டலான பர்ஸ்ட் லுக்

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘லவ் & வார்’. ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கவுஷல் ஆகிய மூன்று முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், படத்தின் உலகத்தையும் ரன்பீர் கபூரின் கதாபாத்திரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் அவரது இரண்டு புதிய தோற்றங்கள் அடங்கிய போஸ்டர்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். முதல் போஸ்டரில் ரன்பீர் கபூர் தனித்துவமான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். சஞ்சய் லீலா […]

ஹீரோவாக மட்டுமல்ல.. இயக்குநராகவும் களமிறங்கும் நடிகர் கார்த்திகேயா!

‘ஆர்எக்ஸ் 100’ திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகர் கார்த்திகேயா கும்மகொண்டா, தனது புதிய திரைப்படத்தை அறிவித்துள்ளார். ‘கம்பேக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ், அவரது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் கார்த்திகேயா தனது திரைப்பயணத்தில் புதிய அத்தியாயத்தை தொடங்குகிறார். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கார்த்திகேயா கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் இப்படத்தை தயாரிக்கும் அவர், கதாநாயகனாக நடிப்பதுடன் இயக்குநர் பொறுப்பையும் ஏற்றுள்ளார். அவரது மனைவி லோஹிதா ரெட்டி இப்படத்தை தயாரிக்கிறார். இப்படம் 2027-ம் ஆண்டு […]