Browsing category

Tamil Cinema News

ராஜா சாரின் இசைதான் படத்தின் மிகப்பெரிய ஆசீர்வாதம் – கார்த்திக் சுப்புராஜ்

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். மதுரையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி நடைபெற்ற ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். நடிகர் முத்துப்பாண்டி பேசுகையில், இது தனது முதல் மேடை என்றும், வாய்ப்பு […]

சிறை அக்‌ஷய் குமாரின் புதிய கிரைம் டிராமா திரைப்படம் தொடக்கம்!

‘சிறை’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இளம் நடிகர் LK அக்ஷய் குமார் நடிக்கும் புதிய திரைப்படம், இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. கிரைம் டிராமா ஜானரில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பும் இன்று தொடங்கியது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் தயாரிப்பாளர் S. S. லலித் குமார் இப்படத்தை தயாரிக்கிறார். L. K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தில் LK அக்ஷய் குமாருடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். […]

இது எனக்கு ஒரு ஆரம்பம் தான்- வெற்றியில் நெகிழ்ந்த சித்து!

சமீபத்தில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமான ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் வரவேற்பால் வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது. பாலாஜி இயக்கியுள்ள இப்படத்தில் பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா உள்ளிட்டோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரிக்கப்பட்ட இப்படத்திற்கு மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு […]

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கலந்த குடும்பத் திரைப்படம் ‘அப்பா குட்டி’ வரும் அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அப்பா–மகள் இடையிலான ஆழமான பாசத்தையும், அவர்களின் வலுவான உறவையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் ஆண்டனி உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்துடன் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார். ஏற்கனவே வெளியான படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் விஜய் ஆண்டனியுடன் சிறுமி ஒருவர் இடம்பெற்றிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. […]

அசோக் செல்வனின் அன்பில் அவன் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் விளம்பரப் பணிகளுக்கு ரசிகர்கள் அளித்து வரும் பேராதரவுக்கு படக்குழு நன்றி தெரிவித்துள்ளது. அனைத்து தளங்களிலும் கிடைத்து வரும் வரவேற்பு தங்களை நெகிழச் செய்துள்ளதாகவும், ரசிகர்களின் அன்பும் நம்பிக்கையும் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். முன்னதாக அறிவிக்கப்பட்டபடி, ‘அன்பில் அவன்’ திரைப்படம் செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இந்நிலையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் விநியோகஸ்தர்களிடம் ஏற்பட்டுள்ள அதிகப்படியான எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு, […]

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர் படத்தை மீண்டும் பார்க்க 5 முக்கிய காரணங்கள்!

MCU ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவம் காத்திருக்கிறது! 2019-ல் வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ உலகம் முழுவதும் ரசிகர்களை ஒன்றிணைத்த நிலையில், தற்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ என்ற பெயரில் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ வெளியாகவிருக்கும் நிலையில், எண்ட்கேம் திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் பார்க்க 5 முக்கிய காரணங்கள்: 1. மார்வெலின் பிரம்மாண்டமான சினிமா நிகழ்வை மீண்டும் அனுபவிக்கலாம்! 22 திரைப்படங்களின் மூலம் உருவான கதைக்களங்களையும் […]

நல்ல திரையரங்கு அனுபவமாக இருக்கும் – அசோக் செல்வன் பேச்சு!

‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இசை மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ளார். ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா கதையை எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இப்படத்திற்கு கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் […]

கேரளாவில் துல்கர் சல்மானின் வேஃபாரர் ஃபிலிம்ஸ் வெளியிடும் ‘ஏழு கடல் ஏழுமலை’!

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஏழு கடல் ஏழுமலை’. நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ஒரு எலியும் முக்கிய கதாபாத்திரமாக இடம்பெற்றுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம், நிவின் பாலி மற்றும் சூரி இணைந்து நடித்துள்ளதால் தொடக்கம் முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ‘ஏழு கடல் ஏழுமலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ம் […]

பாடலாசிரியராக தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் இணைந்தார் சிவகார்த்திகேயன்!

நடிகர் சிவகார்த்திகேயன், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பாடலாசிரியராக இணைந்துள்ளார். மரியாதை நிமித்தமாகவும், எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெறவுள்ள விழாவில் சிவகார்த்திகேயன் பங்கேற்பது தொடர்பாகவும், சங்கத் தலைவர் சேரன், பொதுச்செயலாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், பொருளாளர் சுந்தர்ராஜன், துணைத்தலைவர் சினேகன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களான இயக்குநர் செல்வபாரதி, இயக்குநர் KBB நவீன் உள்ளிட்டோர் சிவகார்த்திகேயனை சந்தித்தனர். அப்போது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, பாடலாசிரியராக சிவகார்த்திகேயன் சங்கத்தில் இணைந்துள்ளார். மேலும், சங்கத்தின் செயல்பாடுகள் தொடர்பாக சில ஆலோசனைகளையும் அவர் வழங்கியதாக […]

‘மஹாவீர் கர்ணா’ படத்தில் இணைந்தார் ராகவா லாரன்ஸ்!

மகாபாரதத்தின் மாவீரன் கர்ணனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் பிரம்மாண்ட திரைப்படம் ‘மஹாவீர் கர்ணா’ அறிவிக்கப்பட்டுள்ளது. பென் மூவீஸ் நிறுவனத்தின் ஜெயந்திலால் கடா வழங்கும் இப்படத்தை, RV Studios மற்றும் Sri Neeladri Productions இணைந்து தயாரிக்கின்றன. மஹாவீர் கர்ணன் கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இப்படத்தை இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்குகிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட […]