Browsing category

Tamil Cinema News

கின்னஸ் சாதனை படைத்த அட்லியின் ராக்கா திரைப்படம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில், இயக்குநர் அட்லீ இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘ராக்கா’. இப்படம் சினிமா தொழில்நுட்பத்தில் புதிய சாதனையை படைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 2026-ல், ஒரே நேரத்தில் 37 கலைஞர்களை நிகழ்நேரத்தில் (Real-Time) Motion Capture செய்ததற்காக ‘ராக்கா’ திரைப்படம் கின்னஸ் உலக சாதனை பட்டத்தைப் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அங்கீகாரம் செப்டம்பர் 15, 2026 அன்று வழங்கப்பட்டது. கின்னஸ் உலக சாதனைக்கான […]

ராவடி படத்தின் வெளியீட்டுத் தேதி!

பஸில் ஜோசப் மற்றும் L.K.அக்ஷய் குமார் இணைந்து நடித்துள்ள ‘ராவடி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு புதிய போஸ்டர் மற்றும் ‘குஜிலிமஸ்து’ வீடியோவுடன் அறிவித்துள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் S.S.லலித் குமார் தயாரித்துள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகியுள்ளது. ‘ராவடி’ திரைப்படம் வரும் 2026 டிசம்பர் 24-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியாகியுள்ள ‘குஜிலிமஸ்து’ வீடியோ, காதல், கல்லூரி, அடிதடி, கொண்டாட்டம் […]

அதிரடி ஆக்‌ஷனில் மிரட்டும் ராஷ்மிகா.. மைசா டீசர் வெளியானது!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், ராஷ்மிகா மந்தானா நடிப்பில் உருவாகி வரும் பான்-இந்திய அதிரடி திரைப்படம் ‘மைசா’ (Mysaa). இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. “நான் சோர்ந்துவிட்டேன், நான் நின்றுவிட்டேன், நான் தோற்றுவிட்டேன்…” என்ற ராஷ்மிகாவின் கம்பீரமான பின்னணிக் குரலுடன் தொடங்கும் டீசரில், சமூகத்தின் தடைகளை எதிர்த்து தனியொரு போராளியாக களமிறங்கும் பெண்ணாக அவர் தோன்றுகிறார். போராளியாக மட்டுமல்லாமல், போரின் போக்கையே மாற்றும் சக்தியாகவும் அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கோண்ட் […]

தமிழ் சினிமாவில் நல்ல கதாபாத்திரங்களை எதிர்பார்க்கிறேன் – நடிகை நிதி அகர்வால்

நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ள அவர், அடுத்தகட்டமாக பல்வேறு மொழிகளில் வித்தியாசமான கதைக்களங்கள் மற்றும் கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தும் நோக்கில் பயணித்து வருகிறார். ‘ஹரி ஹர வீர மல்லு’ மற்றும் ‘தி ராஜா சாப்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகளை ஒரே நேரத்தில் திறம்பட கையாண்ட நிதி அகர்வால், தொடர்ந்து கடினமாக உழைப்பதும் […]

ஷங்கர் மகன் படத்தில் ரீ என் ட்ரி கொடுக்கும் நான் அவனில்லை ஜீவன்?

‘காக்க காக்க’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு திரும்புகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘லவ்வர் பாய்’ படத்தில் அவர் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கும் இப்படத்தில் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது ஜீவனும் படக்குழுவில் இணைந்துள்ள நிலையில், இதனை […]

தென்காசியில் தொடங்கியது ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு!

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் ஆஸ்பயர் உபுண்டு பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தென்காசியில் தொடங்கியுள்ளது. சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது தென்காசியின் இயற்கைச் சூழலில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. பிக்பாஸ் தமிழ் சீசன் 5 வெற்றியாளரும் நடிகருமான ராஜு ஜெயமோகன் இப்படத்தை இயக்குவதுடன், கதாநாயகனாகவும் நடிக்கிறார். மொட்டை, இடிந்தகரை உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் துஷாரா விஜயன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் […]

நந்தன் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு!

‘நந்தன்’ திரைப்படத்தின் மூலம் தலித் பஞ்சாயத்து தலைவர்களின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்த இயக்குநர் இரா. சரவணன், தற்போது தனது அடுத்த படைப்பாக ‘நந்தன் 2’ திரைப்படத்தை உருவாக்கி வருகிறார். இரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இரா. சரவணன் எழுதி இயக்குகிறார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் டைட்டில் லுக் தற்போது வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. வழக்கமான திரைப்பட போஸ்டர்களில் இருந்து மாறுபட்ட வகையில் இந்த டைட்டில் போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. கருப்பு-வெள்ளை பின்னணியில், […]

ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி, ‘சிக்மா’ படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் தமிழ்குமரன், ஜேசன் சஞ்சய்யை இயக்குநராக அறிமுகப்படுத்துவதில் லைகா நிறுவனத்திற்கு இருக்கும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படத்தின் […]

ஹபீபி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

காதல் கடிதங்கள், ஆடியோ கேசட்டுகள், நீண்ட தொலைபேசி அழைப்புகளுக்கான காத்திருப்பு என காதல் தனக்கென ஒரு தனி உலகத்தை கொண்டிருந்த காலத்தை மீண்டும் நினைவூட்டும் வகையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹபீபி’. மீரா கதிரவன் இயக்கியுள்ள இந்த தமிழ் காலகட்ட காதல் திரைப்படம், செப்டம்பர் 25 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் வெளியாகிறது. திருநெல்வேலி அருகே உள்ள ஒரு சிறிய நகரத்தை பின்னணியாகக் கொண்டு, நான்கு தசாப்தங்களைக் கடந்து பயணிக்கும் காதல் கதையாக ‘ஹபீபி’ உருவாகியுள்ளது. குடும்பம், […]

புதுச்சேரி முதல்வர் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ படத்தின் இரண்டாவது பார்வை!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். சீயோன் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி வெளியிட்டார். மேலும், படக்குழுவினரை வாழ்த்திய அவர், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளையும் பார்வையிட்டு படக்குழுவினரின் பணியைப் பாராட்டினார். பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள தக்க்ஷன் விஜய்யையும் […]