ஆரி அர்ஜுனன் நடிப்பில் மிரட்டலான ஆக்சன் திரில்லர் திரைப்படம் பகவான்

அம்மன்யா மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில், சி.வி. மஞ்சுநாதா தயாரித்து, சு. காளிங்கன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் “பகவான்”. வித்தியாசமான கதைக்களத்துடன் புராண கால வரலாற்றை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த படம், மித்தாலஜிகல் ஆக்சன் திரில்லராக ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் ஆரி அர்ஜுனன் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பூஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இவர்களுடன் ஜேம்ஸ் பார்ரெட், சந்தோஷ் பிரதாப், ஆடுகளம் நரேன், டெல்லி கணேஷ், ஜெகன், ஆடுகளம் முருகதாஸ், யோக் ஜேபி, பிர்லா போஸ், லக்கி நாராயணன், அலெக்ஸ், அபிஷேக், சத்யா, மாஸ்டர் பாண்டி, அஜெய் தாத்தா, ஜெகதீஷ், ஜி.வி. கிருஷ்ணா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முருகன் சரவணன் ஒளிப்பதிவில், மகேந்திரன் கணேசன் எடிட்டிங்கில் உருவாகும் இந்த படத்திற்கு சம்பத் ஜி எழுதிய பாடல்களுக்கு ப்ரசன் பாலா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை யுவராஜ் அமைத்துள்ளார். கலா மாஸ்டர் நடன அமைப்பையும், பாலையா கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். ஸ்டண்ட் காட்சிகளை ஹரி தினேஷ் அமைத்துள்ளதுடன், ஆடை வடிவமைப்பை வினையா தேவ் மேற்கொண்டுள்ளார்.

படம் குறித்து இயக்குநர் சு. காளிங்கன் கூறுகையில், “இந்த பிரபஞ்சத்தில் நமக்கு புரியாத பல ரகசியங்கள் உள்ளன. பகவான் யார்? அவர் ஒரு உருவமா அல்லது அதற்கு மேல் ஏதாவது இருக்கிறதா? இல்லுமினாட்டி என்ன? போன்ற கேள்விகளுக்கான பதில்களை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மகாபாரதக் கதையின் ஒரு பகுதியும் இதில் இடம்பெறும். மேலும், பொதுவாக கவனிக்கப்படாத பல்லி போன்ற ஒரு உயிரினம் கூட இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறது” என்றார்.

புதிய சிந்தனை, வித்தியாசமான கதை அமைப்பு மற்றும் பலத்த தொழில்நுட்ப அம்சங்களுடன் உருவாகும் “பகவான்” திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை வழங்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், விரைவில் டிரெய்லர் மற்றும் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது. Seventh ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் கண்ணன், இப்படத்தை மே மாதம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிட உள்ளார்.

Aari ArujunanBhagavanஆரி அர்ஜுனன்பகவான்