கான் சிட்டி முதல் சிங்கிள் ரிலீஸ்… வைரலாகும் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “கான் சிட்டி” திரைப்படம், வெளியீட்டுக்கு முன்பே ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வகையில், இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

“ரா ரா ரங்கையா” என தொடங்கும் இந்த பாடல், “கொரியன் ஃபேமிலி சாங்” என்ற சுவாரஸ்யமான தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஷான் ரோல்டன் இசையமைப்பில், மோகன் ராஜன் வரிகளில் உருவான இந்த பாடலை வங்கல் புள்ள, விக்கி, சுப்லாஷினி, லீலா ஆகியோர் உற்சாகமாக பாடியுள்ளனர். முழுக்க முழுக்க நம்மூர் தரைலோக்கல் குத்து ஸ்டைலில் அமைந்துள்ள இந்த பாடல், ரசிகர்களை ஆட வைக்கும் வகையில் உருவாகியுள்ளது.

பாடலின் காட்சியமைப்பும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் இணைந்து ஆடும் குத்தாட்டம் பாடலுக்கு கூடுதல் உயிரூட்டுகிறது. ஒவ்வொரு காட்சியும் வித்தியாசமான அம்சங்களுடன் அமைந்துள்ளதால், வெளியான சில நேரங்களிலேயே சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

“கான் சிட்டி” திரைப்படம், நகர வாழ்க்கையில் கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் பரபரப்பு கலந்த ஒரு முழுமையான எண்டர்டெயினராக இப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அர்ஜூன் தாஸ் நாயகனாகவும், அன்னா பென் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகி பாபு, வடிவுக்கரசி மற்றும் குழந்தை நட்சத்திரம் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை Netflix நிறுவனம் பெரும் தொகைக்கு கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து வெளியாகும் அப்டேட்கள் மூலம் கவனம் ஈர்த்து வரும் “கான் சிட்டி”, முதல் சிங்கிள் வெற்றியால் மேலும் ஹைப் பெற்று, விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Anna BenArjun DasCon CityHarish DurairajKorean FamilyRa Ra RangaiyaSean Roldanகான் சிட்டி