தளபதி விஜய்யை சந்தித்த அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா
தளபதி விஜய்யை, அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா சந்தித்த நிகழ்வு குறித்து காண்போம்.
விஜய், தற்போது தனது கடைசிப் படமான ‘தளபதி 69’ படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து, அடுத்த ஷெட்யூல் வருகிற ஆண்டு தொடங்கவுள்ளது.
இந்நிலையில், விஜய்யை அவரது இல்லத்தில் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ரா, அலங்கு என்ற படத்தினை தயாரித்துள்ளார். இந்தப் படம் வரும் 27-ம் தேதி அதாவது நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில், அலங்கு படத்தின் படக்குழுவினர் விஜய்யைச் சந்தித்து, அவருக்கு ‘அலங்கு’ படத்தின் டிரைலரைப் போட்டுக் காண்பித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை ‘அலங்கு’ படக்குழுவினரே மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் எஸ்.பி. சக்திவேல் எழுதி இயக்கியுள்ள ‘அலங்கு’ என்ற படத்தினை சங்கமித்ரா தயாரித்துள்ளார். ‘அலங்கு’ படத்திற்கு பாண்டிகுமார் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.
படத்தில் குணநிதி, செம்பன் வினோத், காளி வெங்கட் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தின் பாடல் ஏற்கனவே ரிலீஸ் ஆகி பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. படத்திற்கு அஜீஸ் இசை அமைத்துள்ளார்.
முன்னதாக படக்குழு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து, படத்தின் டிரைலரைப் போட்டுக் காட்டி, வாழ்த்து பெற்றனர். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வேகமாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.