ஆதாரத்துடன் நிரூபித்த முத்து, கதி கலங்கி நின்ற ரோகிணி, இன்றைய சிறக்கடிக்க ஆசை எபிசோட்.!
முத்து ஆதாரத்துடன் நிரூபிக்க ரோகிணி கதி கலங்கி நின்று உள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து டைனிங் டேபிள் எடுத்து கோர்ட் செட்டப்பில் வைத்து மனோஜை இழுத்து நிற்க வைக்கிறார். உடனே எதுக்குடா இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்க உனக்கு என்ன பைத்தியமா என்று எல்லாம் பேச அவசரப்படாதீங்க என்று சொல்லுகிறார். இதுல ரெண்டு குற்றவாளிகள் இருக்காங்க ஆனா ஒன்னு தானே இருக்கு முதல் குற்றவாளியை விசாரிச்சிடலாம் என்று சொல்லி ஆரம்பிக்கிறார். பிறகு அப்பா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச 27 லட்ச ரூபாயா இவன் எடுத்துக்கிட்டு ஓடிட்டான் அதை இவன் கிட்ட இருந்து ஒரு பொண்ணு ஏமாத்திகிட்டு ஓடிடுச்சு கனடா போனதெல்லாம் உண்மைதான் என்று சொல்ல அதுதான் எல்லாருக்குமே தெரியுமே இப்ப என்ன ஆச்சு என்று கேட்கின்றனர்.
அந்தப் பொண்ணு கிட்ட இருந்து நாலு அஞ்சு மாசத்துக்கு முன்னாடியே 27 லட்சத்தை வட்டி போட்டு 30 லட்சம் வாங்கிட்டாங்க அது நம்ம கிட்ட இருந்து மறைச்சிருக்காங்க என்று சொல்லுகிறார். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைய மனோஜ் இல்லவே இல்லை என்று சாதிக்கிறார். ரோகினி கண்டுபிடிச்சிட்டான் ஆனா இவன்கிட்ட எப்படி சாட்சி இருக்கப் போகுது என்று சொல்லி எங்க மேல பொய் எல்லாம் சொல்லாதீங்க உங்ககிட்ட சாட்சி இருக்கா என்று கேட்கிறார். உடனே முத்து கைதட்டி நல்ல கேள்வி என்று சொல்லிவிட்டு சாட்சி இருப்பதாக சொல்லுகிறார்.
இருவரும் அதிர்ச்சி அடைய உடனே ரோகினி இவரே ஒரு ஆள செட்டப் பண்ணி இந்த மாதிரி சொல்ல சொல்லுவாரு என்று சொல்ல என் புருஷன் அப்படியெல்லாம் சொல்லணும்னு அவசியம் கிடையாது என்று மீனா சொல்லுகிறார். அவசரப்படாத மீனா கூட்டிட்டு வருவோம் என்று சொல்லி ஜீவா தான் சாட்சி என்று சொல்ல இருவரும் ஒன்றும் புரியாமல் நிற்கின்றனர்.
உடனே முத்து ஜீவா ஜீவா என்ற இரண்டு வாட்டி கூப்பிட வாசலில் வந்து நிற்கிறார் குடும்பத்தினர் அனைவரும் ஜீவாவை பார்த்து அதிர்ச்சியாக நிற்க அவர் உள்ளே வந்து உங்க பையன ஏமாத்துனது நான்தான் என்று சொல்ல விஜயா அவரை திட்டுகிறார். அண்ணாமலை அதை நான் எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் தெரியுமா என்று சொல்ல தெரியும் அங்கிள் என்ன மன்னிச்சிடுங்க என்று சொல்லி அனைவரிடமும் மன்னிப்பு கேட்கிறார். உடனே விஜயா போலீசுக்கு போன் பண்ணனு என்று சொல்ல, எதுக்கு போன் பண்ணனும் என்று ஜீவா கேட்கிறார்.
எங்க கிட்ட இருந்து வாங்குன பணத்தை குடுக்குறதுக்கு என்று சொல்ல நான் அத வட்டியோட எப்பவோ மனோஜ் கிட்ட கொடுத்துட்டேன். அதையும் நான் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சு தான் கொடுத்தேன். என்று அந்தப் பேப்பரையும் மனோஜின் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் ஆன பில்லையும் கொடுக்கிறார். ஸ்ருதியும் ரவியும் செக் பண்ணி விட்டு உண்மைதான் என்று சொல்லுகின்றனர். மனோஜ் வீட்ல இருக்கிற எல்லாரையும் ஏமாத்திக்கிட்டு இருக்கறதுனால தான் நான் அவன்கிட்ட இருந்து பணத்தை எடுத்துட்டு போகணும்னு நினைச்சேன் ஆனா இதெல்லாம் எந்த காரணம் சொன்னாலும் நான் பண்ணது தப்புதான் என்று மீண்டும் மன்னிப்பு கேட்கிறார். ஆனா முத்து நல்லவரு அவர் ஒரு டிஃபரண்டான கேரக்டர் அவருக்காக தானே உண்மையை சொல்ல வந்தேன் என்று சொல்லிவிட்டு அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கிளம்புகிறார் ஜீவா.
அதிர்ச்சியில் குடும்பத்தினர் இருக்க மனோஜ் ரோகினியை என்ன கேட்கின்றனர்? அண்ணாமலை என்ன கேட்கிறார்?அதற்கு மனோஜ் பதில் என்ன? விஜயா ரோகிணியை என்ன செய்யப் போகிறார்? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.