தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக 33 ஆண்டுகளை கடந்த அஜித்குமார்.. மனைவியின் அன்பான வாழ்த்து.!!

தமிழ் சினிமாவில் வெற்றி பெறமாக 33 ஆண்டுகளை கடந்துள்ளார் அஜித் குமார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்.இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
இந்த நிலையில் தற்போது அடுத்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகன் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருப்பவர் என்றே சொல்லலாம்
இந்த நிலையில் இவர் தமிழ் சினிமாவில் நுழைந்து இதுவரை 33 வருடங்களை வெற்றிகரமாக கடந்து வந்துள்ளார். இது குறித்து இவரது மனைவி ஷாலினி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்ந்து பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.
அதில் நீங்கள் வெறும் தொழிலை மட்டும் உருவாக்கல மக்களை சுமந்து வாழ்க்கையில் மாற்றி எல்லாவற்றையும் அருமையா செய்து இருக்கீங்க உங்களை நினைத்து ரொம்ப பெருமையா இருக்கு 33 வருஷம் ஆகிடுச்சு என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram