மீண்டும் கார் விபத்தில் அஜித்.. வைரலாகும் அதிர்ச்சி தகவல்..!
மீண்டும் கார் விபத்தில் சிக்கி உள்ளார் அஜித்குமார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித்குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
மகிழ் திருமேனி இயக்கத்திலும்,லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அர்ஜுன், திரிஷா, ரெஜினா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இது ஒரு புறம் இருக்க அஜித் மறுபுறம் கார் ரேஸில் தீவிரம் பயிற்சி பெற்று வருகிறார் ஏற்கனவே கார் ரேஸின் போது அவருக்கு விபத்து ஏற்பட்டு எதுவும் ஆகவில்லை என்று தகவல் வெளியானது.
தற்போது அவர் ஸ்பெயின் நாட்டில் நடக்க இருக்கும் கார் ரேஸில் பங்கேற்க இருப்பதால் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அப்போது அவர் கார் விபத்தில் சிக்கியுள்ளார். ஆனால் எந்த ஒரு பெரிய பாதிப்பும் இல்லாமல் அஜித் நலமாக இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இருந்தாலும் இது அஜித் ரசிகர்களிடையே பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
