கூலி படம் குறித்து வெளியான தரமான தகவல்..ரசிகர்கள் ஹேப்பி..!
கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவர் தற்போது கூலி என்ற படத்தில் நடித்து வருகிறார்.இதற்கு முன் இவரது நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்து வருகிறார்.
மேலும் சத்தியராஜ், அமீர் கான், நாகர்ஜுனா, ஸ்ருதி ஹாசன், உபேந்திரா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தற்போது இந்த படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.அதில்,ஏற்கனவே 70 %படப்பிடிப்பு முடிந்திருக்கும் நிலையில் தற்போது சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளார்களாம்.மார்ச் மாதத்தில் இந்த படத்தின் படபிடிப்பு முழுவதும் முடிய அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி தீயாக பரவி வருகிறது.
