‘ஜெயிலர்-2’ படத்தின் வைரலாகும் ரஜினி புகைப்படம்..
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர். நெல்சன் லைவ் லொகேஷனிலேயே படமாக்கியிருந்தார். அது பார்ப்பதற்கு மிக தத்ரூபமாக இருந்தது. ரசிகர்கள் ரசித்தனர். அதேபோல ‘ஜெயிலர்-2’ படத்தையும் பல லைவ் லொகேஷனில் படமெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், படத்தில் ஒரு சண்டை காட்சியில் ரஜினி அதிக எடை கொண்ட ஒரு பொருளை தூக்கும்படியான காட்சி எடுக்கப்பட்டது. அப்போது, நெல்சன் க்ளோஸ் அப் ஷாட்டிற்கு மட்டும் ரஜினியை பயன்படுத்திவிட்டு வெயிட்டை தூக்குவதற்கு டூப்பை பயன்படுத்தலாம் என திட்டமிட்டார். ஆனால், ரஜினிகாந்த் ‘டூப் எல்லாம் வேண்டாம், நானே பண்றேன்’ என சொன்னவுடன் நெல்சன் உட்பட படக்குழுவும் வேண்டாம் என்றனர் .
ஆனால், ரஜினி டூப் இல்லாமல் அந்த அதிகமான எடையை தூக்கி வீசி அந்த ஸ்டண்ட் காட்சியில் நடித்துள்ளார். அதனை பார்த்து ஒட்டுமொத்த படக்குழுவும் வியந்து போய்விட்டார்கள். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி தெறிக்கிறது. கூடவே ஒரு ஏ.ஐ புகைப்படமும் வைரலாகி வருகின்றது.
ரஜினி அதிகமான எடையை தூக்குவது போலவும், படக்குழுவினர் ஆச்சர்யமாக பார்ப்பது போலவும் ஒரு ஏ.ஐ புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தை பார்க்கும்போது அப்படியே ரியலாக உள்ளது. ஏ.ஐ புகைப்படமா? அல்லது ரியலான புகைப்படமா? என ரசிகர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். அந்தளவிற்கு அந்த ஏ.ஐ புகைப்படத்தை படக்குழுவினர் உருவாக்கியிருக்கின்றனர்.
படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர்.மேலும், எஸ்.ஜெ சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கேமியோ கதாபாத்திரத்தில் பாலகிருஷ்ணாவை நடிக்க வைக்க நெல்சன் முடிவெடுத்தார். பாலகிருஷ்ணாவும் இப்படத்தில் நடிக்க ஓகே சொன்ன நிலையில், திடீரென விலகியதாக சொல்லப்படுகிறது. தற்போது, அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி அந்த ரோலில் நடிப்பதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

