Web Ads

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ்..

விஜய்யின் கடைசிப்படமாக, ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்…

‘ஜன நாயகன் திரைப்படம்’ நந்தமுரி பாலகிருஷ்ணாவின் ‘பகவந்த் கேசரி’ என்ற படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. இந்நிலையில், இது பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அன்படி, ‘ஜன நாயகன்’ படத்தின் 60 சதவீத காட்சிகள் பகவந்த் கேசரியைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தில், விஜய்யின் பெயர் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என்று கூறப்படுகிறது (TVK). இது பகவந்த் கேசரியில் பாலகிருஷ்ணாவின் ‘நெலகொண்டா பகவந்த் கேசரி’ பெயரை ஒத்திருக்கிறது. இருப்பினும், விஜய் ரசிகர்களை பரவசப்படுத்தும் அம்சங்களுடன் படத்தில் பல காட்சிகளை இயக்குநர் எச்.வினோத் சேர்த்துள்ளதாக தெரிகிறது.

இப்பபடம் முழுக்க முழுக்க மாஸ் மற்றும் குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகி இருக்கிறது. பூஜா ஹெக்டே மற்றும் மமிதா பைஜு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இந்த படத்தை கே.வி.என். புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. அனிருத் இசையமைத்துள்ள இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி வெளியாகிறது.

சமீபத்தில் வெளியான ‘தளபதி கச்சேரி’ பாடல் இந்திய அளவில் வைரலாகி முதலிடம் பிடித்தது. இதனைத் தோடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா டிசம்பர் 28-ந்தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதனை ரசிகர்கள் ஆர்வமாய் எதிர்பார்த்துள்ளனர்.

thalapathy vijay in jana nayagan movie update
thalapathy vijay in jana nayagan movie update