Web Ads

அருண் விஜய் நடித்த ‘ரெட்ட தல’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்..

அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ரெட்ட தல’ படத்தின் தகவல்கள் காண்போம்..

டிசம்பர் 18-ந்தேதி அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள ‘ரெட்ட தல’ வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், அதே தேதியில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ படம் வெளியாகவுள்ளது. ‘டியூட்’ வெற்றிக்குப் பிறகு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இதனால், ‘ரெட்ட தல’ படக்குழு தங்களது வெளியீட்டு தேதியை மாற்றியிருக்கிறார்கள்.

தற்போது முன்பு அறிவித்த தேதியில் இருந்து ஒரு வாரம் கழித்து, கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘ரெட்ட தல’ வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் 3-வது தயாரிப்பாக ‘ரெட்ட தல’ உருவாகியிருக்கிறது. இதனை திருக்குமரன் இயக்கியுள்ளார். ஸ்டைலிஷ் ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் அருண் விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இதில் அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருண் விஜய் படங்களிலேயே அதிகப் பொருட்செலவில் தயாராகியுள்ள படம் ‘ரெட்ட தல’ என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒளிப்பதிவாளராக டிஜோ டாமி, இசையமைப்பாளராக சாம் சிஎஸ், எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

arun vijay in retta thala movie release date changed
arun vijay in retta thala movie release date changed