ரசிகர்கள் கடும் மோதல்: நயன்தாரா மீது திரிஷா செம கடுப்பு
நயன்-திரிஷா ரசிகர்களின் மோதல் விவகாரம் பற்றிக் காண்போம்..
அஜித்தும் திரிஷாவும் ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து, விடாது ஜோடியாகி வெளியான ‘குட் பேட் அக்லி’ அஜித் ரசிகர்களுக்கு எதிர்பார்த்த ட்ரீட் ஆக அமைந்துள்ளது. இப்படத்திற்கு, அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருவதால் படக்குழு உற்சாகமாக இருந்தாலும், திரிஷா கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அவர் போட்ட இன்ஸ்டா பதிவு அப்டி, அதில்..
‘ஷப்பா டாக்ஸிக் ஆளுங்களா… உங்களுக்கெல்லாம் எப்படி தான் தூக்கம் வருதோ? சோஷியல் மீடியாவில் இருந்துக்கிட்டு அறிவுகெட்டதனமா மற்றவர்களை பற்றி பதிவுகளை போடுவது தான் உங்க வேலையா?
உங்களுக்காகவும் உங்களுடன் வாழ்பவர்களுக்காகவும் மிகவும் வருந்துகிறேன். இது கோழைத்தனம். காட் பிளெஸ் யூ’ என பதிவிட்டுள்ளார். ஹேட்டர்ஸுக்கு பதிலடி கொடுக்க தான் அவர் இந்த பதிவை போட்டிருக்கிறார்.
அவரின் இந்த கோபத்துக்கு காரணம் நயன்தாரா ரசிகர்கள் தான் என கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படத்தில் திரிஷாவின் நடிப்பை பாராட்டும் விதமாக அவரது ரசிகர்கள், ஒரே ஒரு லேடி சூப்பர் ஸ்டார் தான்.. அது எங்க திரிஷா மட்டும் தான் என பதிவிட, இதற்கு பதிலடி கொடுத்து நயன்தாரா ரசிகர்கள், குட் பேட் அக்லியில் திரிஷா நடிப்பு மோசம் என விமர்சித்ததோடு,
20 வருஷமா சினிமாவில் நடித்தும் சொந்தக் குரலில் டப்பிங் பேச தெரியல. நடிப்பும் அவருக்கு வரல என ரிப்ளை கொடுத்தனர். இதனால் இரு தரப்பு ரசிகர்களுக்கும் இடையே சோசியல் மீடியாவில் மோதல் வெடித்தது.
இந்த மோதலால், டென்ஷன் ஆன திரிஷா, நயன்தாரா ரசிகர்களை அட்டாக் பண்ணும் விதமாக ஒரு பதிவை போட்டுள்ளார். அவர் நயன்தாரா ரசிகர்களை விமர்சித்து தான் இந்த பதிவை போட்டுள்ளார் என்பதற்கு, அதில் அவர் குறிப்பிட்டுள்ள ‘டாக்ஸிக்’ என்கிற வார்த்தை தான் காரணம்.
ஏனெனில், நயன்தாரா தற்போது நடித்து வரும் படத்தின் பெயர் டாக்ஸிக். அதைக் குறிப்பிட்டு, திரிஷா இந்த பதிவை போட்டுள்ளதாக நெட்டிசன்கள் டீகோடு செய்துள்ளது வைரலாகி வருகிறது.