இந்திய சினிமா உலகையே கைப்பற்றும் தருணம் இது: நடிகை ஜான்வி பெருமிதம்
‘கேன்ஸ்’ திரைப்பட விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய திரைப்படம் பற்றிப் பார்ப்போம்..
நடிகை ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டர் நடிக்கும், ‘ஹோம்பவுண்ட்’, திரைப்படம், மே 13 முதல் மே 24 வரை நடைபெற உள்ள 78-வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. இதனால், இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கய்வான் இயக்கியுள்ள இந்த படம், அன் செர்டைன் ரிகார்ட் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல், கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே இந்திய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை, ஜான்வி தனது வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜான்வி உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக போட்டுள்ள பதிவில், ‘இந்திய சினிமா உலகையே கைப்பற்றும் தருணம் இது. #Homebound திரைப்படம் 78-வது கேன்ஸ் திரைப்பட விழாவின் ‘Un Certain Regard’ பிரிவில் அதிகாரப்பூர்வ தேர்வில் இடம் பிடித்துள்ளது என்பதை அறிவிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் இதயங்கள் நிறைந்துள்ளன, இந்தப் பயணத்தை பெரிய திரைகளில் உங்களுக்குக் காண்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்!” என கூறியுள்ளார்.
இஷான் மற்றும் ஜான்வி இருவரும் நீண்ட இடைவெளிக்கு பின்னர், தற்போது ஹோம்பவுண்ட் திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள்.
மேலும், கடந்த ஆண்டு இவர் ஜூனியர் என்.டி. ஆர் ஜோடியாக நடித்த ‘தேவரா’ படம் ரிலீஸான நிலையில், இதன் 2-ம் பாகத்திலும் நடிக்கவுள்ளார். அதேபோல், ராம் சரண் புஜ்ஜிபாபு சனா இயக்கும் ‘பெடி’ படத்திலும் ஹீரோயினாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
‘மயில்’ புகழ் ஸ்ரீதேவியின் மகளான ஜான்விக்கு தமிழ் சினிமா பக்கம் எப்போது ஆர்வம் வருமோ? பார்க்கலாம்.!