கலக்கப் போவது யாரு?: சூர்யா-45 படத்தில் மேலும், ஒரு மலையாள நடிகை என்ரி
சூர்யா நடிக்கும் 45-வது படத்தின் அப்டேட் பார்ப்போம்..
ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா-45 படத்திலிருந்து ஏ.ஆர்.ரகுமான் விலகிய பிறகு, சாய் அபயங்கர் கமிட் ஆகி வொர்க் நடைபெறுகிறது. சாய், பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணி ஜோடியின் மகன் ஆவார்.
சூர்யா-45 படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அட்லீ இயக்கிய படங்களுக்கு கேமராமேனாக இருந்த விஷ்ணு, இப்படத்தில் பணியாற்றுகிறார்
‘ஆறு’ படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா இணைந்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் மலையாள நடிகை ஸ்வாசிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், தற்போது நடிகை அனகா ரவியும் சேர்ந்துள்ளார். அதாவது, மலையாளத்தில் லேட்டஸ்டாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று விரும்பி ‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தின் நாயகிதான் அனகா ரவி.
இவர் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இதனால், சுவாசிகாவுக்கும் அனகாவுக்கும் திரைமறைவு போட்டி உருவாகியுள்ளது. இதில், கோலிவுட்டில் கலக்கப் போவது யாருன்னு பொறுத்திருந்து பார்க்கலாம்.