பாரதிராஜாவை தேற்றவே முடியவில்லை: சகோதரர் ஜெயராஜ் உருக்கம்

‘யாருக்கு ஆறுதல் சொல்லுவது என்றே எனக்கு தெரியவில்லை’ என இயக்குனர் பாரதிராஜாவின் உடன்பிறந்த தம்பி ஜெயராஜ் கண்ணீருடன் பேசியுள்ளார். அவர், கூறியதாவது:

‘மனோஜ் இறந்த பிறகு, பாரதிராஜாவை தேற்றவே முடியவில்லை. அவருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. மனோஜ் மாதிரி ஒரு பையன பாக்கவே முடியாது. அவனுக்கு நடிப்பதில் விருப்பமே இல்ல, டைரக்சன் மேல விருப்பமா இருந்தான்.

இதனால், அமெரிக்காவுக்கு போய் படிச்சான். படிச்சிட்டு வந்து மணிரத்னம் சார், சங்கர் சாரிடம் உதவி இயக்குனரா பணியாற்றினான். இன்னைக்கு உலகத்துல எந்தெந்த விஷயம் கரண்ட்ல இருக்கோ, அத்தனை விஷயமும் மனோஜ்க்கு தெரியும், சினிமாவை பத்தி அனைத்தும் தெரியும். அவனும் என் பையனும் சேர்ந்தா நான் எப்போதுமே சினிமா பத்தி மட்டும் தான் பேசிக்கிட்டே இருப்பாங்க.

என்னுடன் சில நிறைய விஷயங்களை மனோஜ் பேசுவாரு, அப்போதும் சினிமா தான் பற்றி நாங்க ரெண்டு பேரும் பேசிப்போம். அவனுக்கு மட்டும் நல்ல பெரிய ப்ராஜெக்ட் கிடைத்து இருந்தால், நிச்சயமா மனோஜ் ஜெயிச்சிருப்பான். அவன் யாரு என்பதை ப்ரூவ் பண்ணி இருப்பான். ஆனா அதுக்கு வாய்ப்பு கிடைக்காம போனது தான் மனோஜ்க்கு மிகப்பெரிய துரதிர்ஷ்டம்.

அப்படி ஒரு நல்ல பையனுக்கு இறைவன் ஏன் இப்படி பண்ணாருன்னு தெரியல, அடுத்தவர்களை கஷ்டப்படுத்தக்கூடாது என்று நினைக்கும் அவனுக்காக, இந்த நிலைமை என்று நினைக்கும்போது தான் சங்கடமாக இருக்கிறது.

மனோஜின் பிள்ளைகளைப் பற்றி நினைத்து கவலைப்படுவதா, அவரின் மகள் மனைவியை பற்றிய நினைப்பதா, இல்லை அண்ணன் பாரதி ராஜாவை பற்றி நினைப்பதா என்று எனக்கு தெரியாமல், கொலப்ஸ் ஆகி அப்படியே மைண்ட் ஃபுல்லா அப்செட் ஆகவே இருக்கிறது. இந்த மனுஷனுக்கு நான் எப்படி ஆறுதல் சொல்லப்போகிறேன் என்றே எனக்கு தெரியவில்லை. மனோஜ் இறந்த பிறகு பாரதிராஜாவுக்கு சில நேரம் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை, வீட்டுக்கு வருபவர்களிடம் மனோஜ் பற்றி சொல்லி அழுகிறார்.

மாடியில் விட்டுவிட்டு வந்தால் அவராகவே கீழே வந்து உட்கார்ந்துகொண்டு மருமகளை பேத்திகளையும் ஒழுங்காக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார், அவரை நினைத்தால் ரொம்பவே வேதனையாக இருக்கிறது’ என ஜெயராஜ் உருக்கமாக கூறியுள்ளார்.

what happened to bharathiraja brother jayaraj