இளையராஜாவுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்!

Web Ads

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது 10வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இது அவரின் 1540வது படம் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

“கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. இந்தப் படத்தின் பின்னணி இசை தனி ஆல்பமாக வெளியிட வேண்டும் என்ற எண்ணம் வந்த அளவுக்கு சிறப்பாக உருவாகியுள்ளது” என இளையராஜா தெரிவித்துள்ளார்.

Web Ad 2

“இளையராஜா சார் உடன் பணியாற்றுவது என் வாழ்நாள் கனவு. என் 10வது படத்தில் அது நனவாகியுள்ளது மிகவும் உணர்வுப்பூர்வமான தருணம்” என கார்த்திக் சுப்புராஜ் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச தரத்தில் உருவாகும் இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Karthik Subbaraj Joins Hands with Ilaiyaraaja