குட் பேட் அக்லி படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?
குட் பேட் அக்லி படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் நேற்று திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருந்தது.ரசிகர்கள் கோலாகலமாக ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்று இருந்தனர்.
ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் ஒரே நாளில் 63 கோடிக்கு மேல் வசூல் வேட்டையும் நடத்தியுள்ளது.
இந்நிலையில் அஜித் இந்த படத்தில் நடிக்க 163 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
