தான் நடித்த படங்களில் கணவருக்கு பிடித்தது இந்த படங்கள்தான்.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்.!!

Web Ads

தான் நடித்த படங்களில் கணவருக்கு பிடித்த படங்கள் குறித்து பேசி உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

actress keerthy suresh talk about husband

actress keerthy suresh talk about husband

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி,ரெமோ, அண்ணாத்த, மாமன்னன், ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன் நீண்ட கால நண்பரை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ் அதனை தொடர்ந்து படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

Web Ad 2

அந்த வகையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கணவர் குறித்து பேசியுள்ளார். அதாவது ஆண்டனியிடம் முதலில் நான் காதலை சொன்னேன் எங்களது காதலை சீக்ரெட் ஆக வைக்க நிறைய கஷ்டப்பட்டோம் நான் நடித்த படங்களில் அவருக்கு மகாநடி, சாணிக்காயிதம், ரகு தாத்தா போன்ற படங்கள் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.

இது மட்டும் இல்லாமல் சாணிக்காயிதம் படத்தின் ஜானரே விரும்பியதால் அந்தப் படத்தை பார்த்துவிட்டு 10 நாள் என் பக்கத்தில் கூட வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actress keerthy suresh talk about husband

actress keerthy suresh talk about husband