அழுது கொண்டே அர்ச்சனா சொன்ன விஷயம், சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today episode update 12-06-25

moondru mudichu serial today episode update 12-06-25

நேற்றைய எபிசோடில் நந்தினி அர்ச்சனாவை உள்ளே கூப்பிட சூர்யா முறைக்கிறார். கை எப்படி இருக்கு சூர்யா என்று கேட்க எங்க வீட்ல இருக்கிறவங்களை விட உனக்கு எல்லாமே தெரிஞ்சிருது இந்த வீட்ல ஸ்பை வச்சிருக்கியா என்று கேள்வி கேட்கிறார் அதெல்லாம் இல்ல சூர்யா அந்த ஹாஸ்பிடல்ல எனக்கு தெரிஞ்ச டாக்டர் இருக்காங்க என்று சொல்லுகிறார். நந்தினி ஜூஸ் போடப் போக அர்ச்சனா எதுக்கு கைய ஒடச்சிகிட்ட என்று கேட்க, நான் எதை உடைச்சா உனக்கு என்ன என்று கேட்க நீ யாருக்காக ஓடச்சிகிட்ட எனக்கு அதுதான் பிரச்சனை அந்த நந்தினிக்காக ஒண்ணும் நீ கையை உடைத்து கொள்ளல ஆமா தானே என்று கேட்க, நந்தினிக்காக மட்டும் தான் செஞ்சேன் உனக்கு புடிக்கலைன்னா நீ சூசைட் பண்ணி செத்துடு, சூசைட் பண்ண தெரியலன்னா சொல்லு நான் ஹெல்ப் பண்றேன் என்று சொல்லுகிறார்.

உனக்கு வெட்கமே இல்லையா என்று கேட்க அவளுக்காக போய் நீ கையை உடைத்து இருக்க அவள ஒரு ஆளா என்று கேட்க அவளை ஒரு ஆள் இல்ல அவ ஏன் ஆளு என்று சொல்லுகிறார். ஒரு தோட்டக்காரி உன் பொண்டாட்டியா? உன் மதிப்பை நீ எதுக்கு குறைச்சிக்கிற உன்ன மாதிரி ஒரு சூனியக்காரிக்கு பதில் அவ எவ்வளவு மேல் அவ சொக்கதங்கம், இவளை மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க நான் தான் கொடுத்து வச்சிருக்கணும் என்று சொல்ல, என்கிட்ட இல்லாதது அவகிட்ட என்ன இருக்கு நான் வேணா புடவை கட்டிக்கவா என்று சொல்ல கண்ணாடி திருப்புனா ஆட்டோ ஓடுமா என்று கேட்கிறார்.

இப்ப என்ன பண்ண சொல்ற என்று கேட்க ஆப்ஷன் ஒன்று செத்துடு என்று ஆரம்பிக்க அர்ச்சனா கோபமாக சென்று விடுகிறார். அர்ச்சனா வெளியில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க நந்தினி ஜூஸ் எடுத்துக்கொண்டு வந்து எதுக்கு அழுவுறீங்க சூர்யா சாருக்கு அதிகமா எல்லாம் எதுவும் இல்லை சீக்கிரமா சரியா போயிடும் ஜூஸ் குடிங்க என்று சொல்லி கொடுக்கிறார். அர்ச்சனா நந்தினியிடம் நீ என்ன அவ்வளவு பெரிய அழகியா இல்ல கோட்டிஸ்வரியா எந்த விதத்தில் நீ சூர்யாவுக்கு அழகா தெரியுற, நீதான் அவனுக்கு எல்லாமேவா உனக்காக உயிரைக் கூட தருவானா என் வாழ்க்கையை நீ வாழ்ந்துட்டு நான் சாகனுமா? என்று கேட்க, நீங்க என்ன சொல்றீங்க எனக்கு புரியலமா என்று சொல்ல யார்கிட்ட என்ன பேசுறேன்னு தெரியாத அளவுக்கு பேசுறான் அந்த அளவுக்கு நீ மாத்தி இருக்க நீ சூர்யாவுக்கு எந்த விதத்திலும் பொருத்தமான ஆள் இல்ல நீ அவன விட்டு விலகிப் போயிடுவேன்னு நெனச்சேன் ஆனா சூர்யா என்ன விட உன்ன பெருசா பேசுறான்.

உனக்கு ஒன்னு தெரியுமா நான் இந்த நிமிஷம் வரைக்கும் சூர்யாவை மனசார நேசிக்கிறேன். யாருக்காகவும் நான் சூர்யாவை விட்டுக் கொடுக்க மாட்டேன். நீ ஊர்ல இருந்து வந்தவ எப்படியாவது கிளம்பி போயிடுவேன்னு நம்பினேன் ஆனால் நீ அவனை எப்படி எல்லாம் மாத்தி இருக்க, உன் மடியிலேயே விழுந்து கிடக்கிறான் என்னைக்கா இருந்தாலும் சூர்யா எனக்கு தான் அவன் கூட நான் தான் வாழனும் நீ இல்ல, யாருக்காகவும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொல்லி மிரட்டி விட்டு செல்கிறார். உடனே ரூமுக்குள் ஓடி வந்த நந்தினி அவங்க கிட்ட என்ன சொன்னீங்க என்கிட்ட சம்பந்தமே இல்லாம பேசிட்டு போறாங்க என்று சொல்லி, அர்ச்சனா பேசியதெல்லாம் சூர்யாவிடம் சொல்ல, இப்பயாவது அவள நம்பறியா என்று கேட்க, எத்தனையோ வாட்டி அவளுக்கு சொல்லிட்டா ஆனா திரும்பத் திரும்ப பின்னாடி வந்தா என்ன சொல்ல முடியும் என்று கேட்கிறார்.

அதையும் மீறி நந்தினி அர்ச்சனாவிற்கு சப்போர்ட் பண்ணி பேச சூர்யா கோபப்படுகிறார். சீரும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே என்று அர்ச்சனாவுக்காக தான் எழுதி இருக்காங்க என்று சொல்லிவிட்டு, நந்தினி இடம் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் என்று கேட்க, என்ன ஹெல்ப் என்று கேட்க இந்த தம் அடிக்க எனக்கு ஹெல்ப் பண்ணனும் என்று சொல்ல, நந்தினியும் வேறு வழி இல்லாமல் சிகரட் எடுத்து சூர்யாவின் வாயில் வைத்து பத்த வைக்கப் போக, உடனே வாயிலிருந்து எடுத்துவிட்டு இங்க சாமி போட்டோ இருக்கு, பால்கனி வாங்க என்று கூப்பிடுகிறார். நான் இங்கதான் தம் அடிப்பேன் என்று சொல்ல அதுக்கு தான் உங்களுக்கு சாமி பனிஷ்மென்ட் கொடுத்து கை உடைஞ்சிருக்கு வாங்க என்று கூப்பிடுகிறார்.

பிறகு பால்கனிக்கு வந்து சிகரெட் பத்தவைத்து சூர்யாவிற்கு வாயில் வைத்து வைத்து எடுத்து விட அசோகன் நந்தினி கையில் சிகரெட் இருப்பதை பார்த்து இந்த நேரம் பார்த்து யாரையும் காணமே என்று பதறி வந்து மாதவியிடம் இந்த வீட்ல ஒரு ஆள் நம்ம யாருக்கும் தெரியாம தம் அடிக்கிறாங்க என்று சொல்ல, அதுதான் சூர்யா அடிப்பான்னு தெரியும் என்று சொல்ல சூர்யா அடிப்பான் ஆனா சூர்யா பொண்டாட்டி அடிப்பான்னு உனக்கு தெரியுமா வந்து உன் கண்ணால பாரு என்று கூப்பிட, மாதவி நந்தினி கையில் சிகரெட் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

இன்று வெளியான ப்ரோமோவில் அர்ச்சனா சுந்தரவல்லி இடம் அந்த நந்தினி கிட்ட எல்லாரும் தோத்துப் போயிட்டோமோன்னு எனக்கு தோணுது என்று சொல்லி அழ அவளை பத்தி என்கிட்ட பேசாத என்று சொல்லுகிறார்.

டைனிங் டேபிளில் நந்தினி சூர்யா உட்கார சொல்ல நான் நின்னுகிட்டே ஊட்டி விடுகிறேன் என்று சொல்லுகிறார் எனக்கு கம்பட்டபிளா இருக்காது என்று சொல்ல வேறு வழி இல்லாமல் நந்தினியும் உட்கார்ந்து ஊட்டி விட சுந்தரவல்லி டென்ஷன் ஆகிறார். இவ என்ன உன் பொண்டாட்டியா என்று சுந்தரவல்லி கேட்க நான் கட்டின தாலிவை கழுத்துல இருக்குற வரைக்கும் என் பொண்டாட்டி தான் என்று சொல்லிவிட்டு ஊட்டி விட சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today episode update 12-06-25

moondru mudichu serial today episode update 12-06-25