‘அக்கா’ கீர்த்தி சுரேஷின் ஆக்ஷன் அவதாரம்?: ரசிகர்களின் அழகான குறும்பு?
ஏஜ தொழில்நுட்பம் இன்னும் என்னென்ன காட்சிகளை எல்லாம் அள்ளித் தெளிக்குமோ. இதில், அருவருப்பும் உண்டு, ஆக்கப்பூர்வமும் உண்டு. ஆனால், இது அழகானது. எது என கீர்த்தியை பார்ப்போம்..
கோடைகாலம் துவங்கி விட்ட நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஸம்மர் கட்டிங் செய்த ஹேர் ஸ்டைலுக்கு மாறிவிட்டாரா? என எண்ணுவதற்கேற்ப அவரது தற்போதைய போட்டோஸ்? க்யூட்டாக ஈர்த்து வருகிறது. ஆனால், இது கீர்த்தியின் போட்டோஷுட் அல்ல. ஏஐ மூலம் ரசனையாய் ரசிகர்கள்? வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.
இது தனிமனித உரிமை மீறல். இருப்பினும் இந்த ஹேர் ஸ்டைல் கீர்த்தி சுரேஷின் அழகை எந்த விதத்திலும் குறைத்து காட்டவில்லை என்பதும் கருத்தாக சொல்லப்படுகிறது. (என்னா.. கண்ணியம்)
கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தான் திருமண வாழ்க்கையில் இணைந்தார் என்பதால், “உங்களது இந்த புதிய ஹேர் ஸ்டைலுக்கு எங்களின் மாமியார் என்ன சொன்னார்? என குறும்புடன் சிலர் கேள்வியும் கேட்டுள்ளனர்.
இப்புகைப்படங்கள் தற்போது, வலைத்தளத்தில் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது. திருமணம் முடிந்த பின்னர், எந்த படங்களிலும் கமிட் ஆகாமல் இருந்த கீர்த்தி சுரேஷ், அடுத்ததாக, பாலிவுட்டில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர ‘அக்கா’ என்கிற வெப் தொடரில் மிகவும் போல்டான வேடத்தில் நடித்துள்ளார். இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. இச்சூழலில், நெட் பிளிக்ஸில் நயன்தாரா-மாதவன் நடிப்பில் ‘டெஸ்ட்’ வெளியிடப்பட்டு கலவையான விமர்சனங்களை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.