‘ஜனநாயகன்’ விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் எப்போது?

‘ஜனநாயகன்’ படப்பிடிப்பு எப்போது நிறைவடையும் என்ற தகவல் பார்ப்போம்..

விஜய்யின் அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் குறித்து மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால், இப்படமே விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என சொல்லப்படுவதாலும், புதிய அரசியல் களம் என்பதாலும் மற்றும் ரசிகர்களாலும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படி வெளியீட்டுக்கு பின்னர், முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடப் போவதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு, ஜனவரி 9-ந்தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிலையில், ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு மே மாதம் 15-ந்தேதிக்குள் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னதாகவே விஜய் தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்படும் என கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து விஜய் ஜுன் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரசிகர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.

actor vijay in jana nayagan movie update