ரஜினியின் ‘கூலி’ படத்துக்கு போட்டியாக ரிலீஸாகும் திரைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும், ‘கூலி’ மற்றும் ஹிருத்திக் ரோஷன் பட அப்டேட் பார்ப்போம்..

‘கூலி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதாவது, வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிச்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், ரஜினிகாந்தின் புதிய போஸ்டர் ஒன்றையும் தயாரிப்பு நிறுவனம் பகிர்ந்துள்ளது.

அதில் அவர் தாடியுடன் காணப்படுகிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள கூலி படத்தில் உபேந்திரா, நாகார்ஜுனா, சவுபின் சாகிர், சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள ‘வார் 2’ படமும் ஆகஸ்ட் மாதம் 14-ந் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், அனில் கபூர், கியாரா அத்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அயான் முகர்ஜி இயக்கும் இப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார்.

மிகப்பெரிய போட்டி இந்த இரண்டு திரைப்படங்களிடையே உருவாகப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.இது குறித்து இணையவாசிகள், ‘யாருக்கு யார் போட்டி, காமெடி பண்ணீங்க, பாலிவுட் மடு எங்கே, இண்டர்நேஷனல் மலை எங்கே’ என்பது வைரலாகி தெறிக்கிறது.