குட் பேட் அக்லி : அஜித் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!
குட் பேட் அக்லி படத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வருகிற 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். மேலும் த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா, போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
ஏற்கனவே ஃபர்ஸ்ட் சிங்கிள், செகண்ட் சிங்கிள், டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் நேற்று டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.இது மட்டுமில்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.
இந்நிலையில் அஜித் இந்த படத்தில் நடிக்க 105 கோடி சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது.இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
