வடிவேலுவுக்காக, வழிமீது விழிவைத்து காத்திருக்கிறேன்: நடிகர் ஆர்கே ஃபீலிங்ஸ்..
“வடிவேலு இறங்கி வருவார் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார் ஆர்கே. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..
வடிவேலுவின் தெறிக்க விடும் நகைச்சுவையில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் கேங்கர்ஸ்’ படத்தின் டிரைலர் யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளது.
இந்நிலையில், வடிவேலு தன்னுடைய படத்தில் நடிக்க மறுத்து வருவதாகவும், தான் கொடுத்த அட்வான்ஸ் அவரிடம் உள்ளதாகவும் நடிகர் ஆர்கே பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.
வடிவேலு, தற்போது பகத் பாசில் உடன் இணைந்து ‘மாரீசன்’ படத்திலும் நடித்து வருகிறார். விரைவில் அந்த படமும் திரைக்கு வரவுள்ளது.
சுந்தர். சி இயக்கத்தில் உருவாகியுள்ள கேங்கர்ஸ் படத்தில் நடித்திருக்கும் டிரைலரை பார்த்து ரசிகர்கள் சிரிப்பு மழையில் நனைந்து வருகின்றனர். குறிப்பாக, பெண் வேடம் மற்றும் கடைசியாக வரும் கழுத்துக்கு கீழே யோகா பண்ணுகிறேன் என்கிற டயலாக் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது.
இதனிடையே, வடிவேலு இனிமேல் காமெடி நடிகராக நடிக்க மாட்டேன் என்றும், ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்றும் கூறி வந்த நிலையில், தனது படத்தில் நடிக்காமல் போய்விட்டதாக ஆர்கே தெரிவித்துள்ளார்.
அதாவது, வடிவேலு ஒரு படத்தில் நடிக்க சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தன்னுடைய படத்தில் நடிக்க அவருக்கு கொடுக்கப்பட்ட அட்வான்ஸ் தொகை ஒரு கோடி ரூபாய் அவரிடம் இன்னமும் உள்ளது.
வடிவேலு கொஞ்சம் இறங்கி வந்து என்னுடைய படத்திலும் அவர் காமெடி நடிகனாக நடித்தால், நன்றாக இருக்கும். அதற்கான பேச்சு வார்த்தைகளும் நடைபெற்று வருகிறது. எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன்’ என்றார் ஆர்கே.