Web Ads

‘காந்தக் கண்ணழகி’ மோனாலிசா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

இயக்குனர் சனோஜ் மீது பாலியல் புகார் கொடுத்த மோனாலிசாவின், அடுத்த கட்டம் என்ன என காண்போம்..

கும்பமேளா நிகழ்ச்சியில் காந்தக்கண்களால் வைரலான மோனாலிசாவுக்கு பாலிவுட் இயக்குனர் சனோஜ் மிஸ்ரா சினிமா வாய்ப்பு தருவதாக கூறினார். பின்னர், மோனாலிசாவுக்கு நடிப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவித்தார். ஆனால், என்ன நடந்தது சனோஜால் அந்தப் பெண் மூன்று கர்ப்பமடைந்து அதனை கலைக்கவும் செய்திருக்கிறார்.

ஒருகட்டத்தில் சனோஜ் தன்னை ஏமாற்றுகிறார் என்பதை புரிந்துகொண்ட அந்தப் பெண் காவல் துறையிடம் புகார் அளித்ததால், சனோஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மோனாலிசா தனது இன்ஸ்டாகிராமில் வைத்திருக்கும் ஸ்டோரிகள் தற்போது மேலும் டிரெண்டாக ஆரம்பித்துள்ளன. அதாவது, கடை திறப்பு விழா உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளுக்கு, சிறப்பு விருந்தினராக சென்றது, போட்டோஷூட் செய்தது, விழாவில் ஜாலியாக நடனமாடியது போன்ற வீடியோக்களை ஸ்டோரியாக வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து, சில ஹிந்தி சீரியல்களில் நடிக்க மோனாலிசா முடிவெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த நெட்டிசன்ஸ், சனோஜ் கைது பற்றி பொருட்படுத்தாமல், தனக்கு கிடைத்த பிரபலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து முயற்சிகளை செய்து வருகிறார்.

ஒரு சராசரி வெகுளிப் பெண்ணான மோனாலிசா, போராடினாலும் சினிமாவில் வெற்றி பெற வேண்டும். நல்ல மனிதர்கள் அமைவார்கள்’ என நெஞ்சம் நெகிழ்ந்து தெரிவித்து வருகின்றனர்.

monalisa and director sanoj mishra arrested case