Web Ads

ஜி.வி.பிரகாஷுடன் டேட்டிங்கில் இருக்கிறேனா?: திவ்யபாரதி ஃபைனல் விளக்கம்..

ஜி.வி.பிரகாஷ்-திவ்யா இடையே டேட்டிங் உள்ளது என்ற தகவல் உண்மையா? இது பற்றிய விளக்கம் காண்போம்..

ஜி.வி.பிரகாஷ்-திவ்ய பாரதி இணைந்து நடித்த ‘பேச்சிலர்’ படத்தில் இருவரும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருந்தனர். படமும் வெற்றியை பெற்றது.

பின்னர் சமீபத்தில், ஜி.வி. பிரகாஷ் தயாரித்து நடித்த ‘கிங்ஸ்டன்’ படத்திலும் திவ்யா நடித்திருந்தார். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கிடையே, விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தில் கேமியோ ரோலிலும் நடித்திருந்தார் திவ்ய பாரதி.

இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் மற்றும் திவ்யபாரதி இடையே தொடர்பு ஏற்பட்டதாகவும், அதனால், ஜி.வி. பிரகாஷ் தனது மனைவி சைந்தவியை பிரிந்தார் என்றும் தகவல் பரவியது.

இது குறித்து, ஏற்கனவே இருவரும் விளக்கம் கொடுத்திருந்தனர். இச்சூழலில், மீண்டும் ஜி.வி.பிரகாஷ் உடன் திவ்யா டேட்டிங்கில் இருப்பதாக ஒரு தகவல் பரவுகிறது. இதற்கு மீண்டும் திவ்யபாரதி விளக்கம் தெரிவிக்கையில், ‘ஜி.வி.யின் குடும்ப பிரச்சினைக்கு நான் எப்படி பொறுப்பேற்க முடியும். இது ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி இடையிலான பிரச்சினை. மேலும், திருமணமான ஒருவருடன், நான் ஏன் டேட்டிங் செய்ய வேண்டும்? அது எனக்கு அவசியமும் இல்லை.

பொதுவாக இப்படியொரு வதந்திகளுக்கு பதில் அளிக்க தேவையில்லை என்றாலும் எல்லை மீறிய வதந்திகளுக்கு கண்டிப்பாக பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதோடு, பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் நான் நடந்து கொள்ளமாட்டேன். இது தான் எனது முதலும், கடைசியுமான அறிக்கை’ என இன்ஸ்டாவில் டென்ஷன் ஆகியுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி தம்பதியினர் காதலித்து திருமணம் செய்து, 11 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்த நிலையில், இருவரும் மனம் ஒத்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் விவாகரத்து வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் உள்ளார்.