விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீசுக்கு முன்பே செம லாபம்; கலெக்ஷன் விவரம்..
அடுத்த ஆண்டு பொங்கலையொட்டி ‘ஜனநாயகன்’ ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. இச்சூழலில் இப்படத்தின் விற்பனை விவரம் பற்றிப் பார்ப்போம்..
அரசியல் பேசும் விஜய்யுன் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச்.வினோத் இயக்க, அனிருத் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் வில்லனாக பாபி தியோல் நடிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு, பிரியாமணி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர் இணைந்துள்ளனர். கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் ஷீட் விறுவிறுப்பாக ஒருபுறம் நடைபெற்றுக் கொண்டிருக்க, படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
அவ்வகையில், படத்தின் ஓடிடி உரிமை பெரும் தொகைக்கு விற்பனை ஆகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளுக்கான ஓடிடி உரிமம் மட்டும் ரூ.121 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தி ஓடிடி உரிமம் மட்டும் இன்னும் விற்பனை செய்யப்படவில்லை. அதுவும் செய்யப்பட்டால் நடிகர் விஜய்யின் திரை வரலாற்றில் அதிக தொகைக்கு டிஜிட்டல் உரிமம் விற்கப்பட்ட படமாக ‘ஜனநாயகன்’ மாறும்.
அதாவது ‘லியோ’ பட ஓடிடி உரிமை ரூ.129 கோடிக்கு விற்கப்பட்டது சாதனையாக இருந்தது. ஜன நாயகன் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், இப்படத்தின் தொலைக்காட்சி உரிமமும் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆகியிருக்கிறது.
படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் சுமார் ரூ.55 கோடி கொடுத்து வாங்கியிருக்கிறது. ஆடியோ உரிமை விற்பனையும் பேசப்பட்டு வருகிறது. இதுவரை, ரிலீசுக்கு முன்பே ஜனநாயகன் திரைப்படம் ரூ.176 கோடி வசூலித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.