கமல் ஏன் இப்போது இப்படி வெறிபிடித்தவரைப் போல நடந்து கொள்கிறார்?: முதல் மனைவி வாணி காட்டம்

‘கமலின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது’ என வெகுண்டெழுந்து பேசியுள்ளார் வாணி. இந்நிகழ்வு குறித்து காண்போம்..
கமல்ஹாசனும் பரதநாட்டிய கலைஞரான வாணியும் ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் ஒன்றாக நடித்தனர். 1978-ல் திருமணம் செய்து, 1988-ல் பிரிந்தனர். விவாகரத்துக்குப் பிறகு
பல வருடங்கள் இருவரும் எதுவும் பேசவில்லை. பின்னர், கமல், வாணிக்கு தான் அளித்த ஜீவனாம்சம் என்னை கிட்டத்தட்ட திவாலாக்கியதாக கூறினார். இது வாணியை கோபப்படுத்தியது. இந்த ‘திவால்’ பேச்சு பற்றி ஆவேசமாக வாணி தெரிவிக்கையில்,
‘எனது தோல்வியுற்ற திருமணம் குறித்து நான் எப்போதும் பேசியதில்லை. ஏனெனில், அதை ஒரு தனிப்பட்ட விஷயமாக கருதினேன். ஆனால், கமலின் குற்றச்சாட்டுகள் அபத்தமானது. நாங்கள் விவாகரத்து பெற்றுவிட்டோம். நான் எப்போதும் இதுபோன்ற சேற்றை எறிவதிலிருந்து விலகியே இருந்தேன். ஏனெனில் அது மிகவும் தனிப்பட்ட விஷயம். நாங்கள் இருவரும் அதிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டோம். இப்போது கமல் ஏன் இப்படி வெறிபிடித்தவரைப் போல் நடந்து கொள்கிறார்?
கமலிடமிருந்து பெறும் ஜீவனாம்சத்தால் எனது சொத்து வந்ததா? எனது கடின உழைப்பின் மூலம் எனது வெற்றியை நான் அடைந்தேன். ஜீவனாம்சம் என்பது விவாகரத்து ஒப்பந்தத்தின் ஒரு பகுதி. அதன் விவரங்களைப் பற்றி விவாதிக்க அவர் மறுத்துவிட்டார்.
நாங்கள் பகிர்ந்து கொண்ட பிளாட்டில் இருந்து பயன்படுத்திய உபகரணங்கள் வரை, அதை எனக்கு கொடுக்க கமல் மறுத்துவிட்டார். அப்படிப்பட்ட ஒருவரிடம் நான் என்ன எதிர்பார்க்க முடியும்?
ஜீவனாம்சம் செலுத்தி தான் திவாலானேன் என்ற கமலின் கூற்று மிகைப்படுத்தப்பட்டது. உலகின் எந்த சட்ட அமைப்பும் யாரையும் திவாலாகும்படி ஜீவனாம்சம் வழங்க கட்டாயப்படுத்தாது. உலகின் எந்த நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் யாரையாவது திவாலாக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது? அதைப் படித்ததும் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
நான் திருமணத்திலிருந்து வெளியேறியபோது அவரது அகங்காரம் புண்பட்டிருக்க வேண்டும். ஆனால், நானும் நிறைய கஷ்டப்பட்டேன். அவர் பொருளாதார நெருக்கடி என்று சொல்லி விஷயத்தை முடித்திருக்கலாம்.
விரும்பவில்லை என்றால், எந்த கேள்விக்கும் அவர் பதிலளிக்க மாட்டார். சிரிப்பை போலியாக உருவாக்குவது மற்றும் நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து வெளியே வருவது எல்லோரையும் விட கமலுக்கு நன்றாகத் தெரியும்’ என வாணி கூறியுள்ளார்.
வாணியிடமிருந்து பிரிந்த பிறகு கமல் நடிகை சரிகாவை திருமணம் கொண்டார். அவர்களுக்கு ஸ்ருதி மற்றும் அக்சரா என இரண்டு மகள்கள் (தற்போது நடிகைகளாக) உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடிகை கௌதமியுடன் நீண்டகாலம் லிவ்-இன் உறவில் இருந்தார் கமல். அத்தகு வாழ்வும் சில வருடங்களுக்கு முன்பு பிரிதலுக்கு உள்ளானது.