‘குட் பேட் அக்லீ’ பிரிமியர் காட்சிகளால் பட சுவாரஸ்யம் பாதிக்கும்: இணையதள கருத்துகள்
‘குட் பேட் அக்லீ’ படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில் வெளியிடப்படும் பிரிமியர் காட்சிகளால் பாதிப்பு ஏற்படுமா? என்பது பற்றிப் பார்ப்போம்..
‘தல’ அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் அதிர்ப்தியில் இருந்த ரசிகர்களுக்கு ‘குட் பேக் லீ’ படம் செம ட்ரீட்டாக அமையும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இப்படத்தில் திரிஷா மீண்டும் ஜோடியாக இணைந்துள்ளார். அஜித்தின் பல கெட்அப்கள் வசீகரிக்கின்றன.
‘இப்படத்தை ஆக்ஷன், குடும்ப சென்டிமென்ட் என்ற கலவையில் பழைய ஃபார்மில் அஜித்தை ரசிக்கலாம்’ எனவும் இயக்குனர் ஆதிக் கூறியுள்ளார். இப்படம் அடுத்த மாதம் 10-ம்தேதி ரிலீஸாகிறது. ஜி.வி.பிரகாஷ் இசையும் மிரட்டலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. படத்தில் சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றன. குறிப்பாக டீசர் அதிக வியூவர்ஸ் பார்த்து சாதனை படைத்தது.
‘குட் பேட் அக்லீ’ முதலில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பிரிமியர் காட்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பின்னர் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவில் பிரிமியர் காட்சிகள் நடத்தப்படுவதால் இந்தியாவில் ரிலீஸாவதற்கு ஒரு நாள் முன்னதாக (சில மணிநேரங்கள்) அங்கு ரிலீஸாகவுள்ளது. இதனால், வலைதளங்கள் மூலமாக விமர்சனம் வெளியாகி இந்திய ரசிகர்கள் படம் பார்க்கும் சுவாரஸ்யத்தைக் கெடுக்கும் எனவும் சொல்லப்படுகிறது.
அதெல்லாம் விஷயமே இல்லை, இது ‘தல’ திருவிழா, இந்த தடவை மிஸ் ஆகாது. சுவாரஸ்யம் மேலும் ஏறும்’ என ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.