ஜனநாயகன் படத்தின் ஓடிடி உரிமையை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா?
ஜனநாயகன்படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜூ, பிரியாமணி ,மோனிஷா போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வருகின்றனர்.
இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது இது மட்டுமில்லாமல் அடுத்த வருடம் பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என படக்குழு அறிவித்து இருந்தது.
தற்போது இந்தப் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 121 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
