Web Ad 2

அருணாச்சலத்தை நினைத்து கண்கலங்கும் சுந்தரவல்லி, பயத்தில் ரஞ்சித், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

Web Ads

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial episode update
moondru mudichu serial episode update

நேற்றைய எபிசோடில் ஹரிதா நந்தினியிடம் சூர்யா ஒன்னும் நல்லவன் கிடையாது என்று சொல்ல, சூர்யா சார் நல்லவர் என்று நந்தினி சொல்லுகிறார். மறுபக்கம் காரில் வரும்போது சுந்தரவல்லி அருணாச்சலத்தை நினைத்து கண்கலங்கி அழுது கொண்டு வர குடும்பத்தினர் ஆறுதல் சொல்லுகின்றனர். இந்த கல்யாணத்தை எவ்வளவு பெருசா சந்தோஷமா நடக்கணும்னு ஆசைப்பட்டேன் கூட அவர் இல்லாமல் என்னால என்ன பண்ண முடியும் என்று சொல்ல, சூர்யா பார்த்துப்பான் என்று சுந்தரவள்ளி அண்ணன் சொல்ல, இவன்தான் இந்த நிலைமைக்கு காரணம் இவன் கூட்டிட்டு வந்தவளா தான் பிரச்சனை அப்படி இல்லன்னு சொல்ல முடியுமா என்று கேட்கிறார். உடனே சுந்தர வள்ளி இந்த கல்யாணம் கண்டிப்பாக நடக்கணும் அவரே இல்லனாலும் இந்த கல்யாணத்தை நான் நடத்துவ நாளிலிருந்து இந்த கல்யாண வேலையை பார்ப்பேன் என்று சொல்லுகிறார். மறுபக்கம் சுரேகாவை கல்யாணம் பண்ணிக்க போகும் நபர் மர்டர் பற்றிய விஷயம் ஏதாவது வருதா டிவியில் பார்க்கலாம் என்று உட்கார்ந்து பார்க்கிறார் நந்தினி பரபரப்பாக சீக்கிரமா ஆரத்தி தட்டு எடுங்க அவங்க வர டைம் ஆயிடுச்சு என்று ஆரத்தி கரைத்து எடுத்து வெளியில் தயாராக காத்துக் கொண்டிருக்கிறார்.

கார் வந்து நின்றவுடன் நந்தினி ஆரத்தி தட்டுடன் இருப்பதை பார்த்து கோபத்தில் சுந்தரவல்லி தட்டிவிட்டு இது ஒண்டி தான் இப்போ குறைச்சலா என்று கேட்டு சுந்தரவல்லி சென்று விடுகிறார். வந்தவுடன் ரஞ்சித் டிவி பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கின்றனர். அவர்கள் சொல்வதையும் கேட்காமல் ரஞ்சித் டிவி பார்த்துக் கொண்டிருப்பதால் என்ன விஷயம் என்று கேட்டால் பிஸ்னஸ் விஷயமென்று சொல்லி சமாளிக்கிறார். மறுபக்கம் சூர்யா டென்ஷனாக இருக்க நந்தினி என்னாச்சு சார் என்று கேட்க டாடியை வெளியே எடுக்க முடியல என்று கண் கலங்க நந்தினி ரூமுக்கு ஓடி வந்த கருப்பசாமி இடம் கண்கலங்கி வேண்டி கொள்கிறார். நீ எனக்கு ஒரு தெய்வம் என்றால் அய்யாவும் எனக்கு தெய்வம் தானே இப்படி பண்ணால் சரியா என்னால் நிம்மதியா இருக்க முடியுமா? உனக்கு மனசாட்சி இருக்கா இல்லையா? என் மேல உனக்கு சின்ன இரக்கம் கூட இல்லையா என்று கேட்கிறார்.

உனக்கு எதுக்கு நான் வேண்டி வேண்டி பூஜை பண்ற நான் உன் மேல கோபமா இருக்கேன் உனக்கு மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அவரை நேரடியா எடுத்துக்கிட்டு வந்து நிறுத்து அப்படி இல்லன்னா உனக்கு எனக்கும் எந்த உறவும் இல்ல வச்சுக்கலாம் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் ஹேமாவின் பெற்றோர் சூர்யாவிடம் வந்து ஹேமா வீட்டுக்கே வரல அதுதான் சுரேகாவிடம் கேட்டுப் போக வந்தோம் என்று கண்கலங்கி பேச சூர்யா உள்ளே அழைத்துச் செல்கிறார். சூர்யா சுரேகாவை கூப்பிட குடும்பத்தினர் அனைவரும் வருகின்றனர் சுரேகா வந்து ஹேமா வந்துட்டாலா என்று கேட்க, ஹேமா வரவில்லை என்று சொல்லி இருவரும் கண் கலங்கி அழுகின்றனர். உடனே சூர்யா ஏதோ தப்பா இருக்கு போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் கொடுங்க என்று சொல்லிக் கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து டிவியில் 23 வயது பெண் கொலை செய்யப்பட்டு பாதி எரிந்த நிலையில் இருப்பதாக சொல்வதைக் கேட்டு இருவரும் அந்த டிவியை பார்த்து கண்கலங்கி அழுது என் பொண்ண கொண்ணுட்டாங்களா என்று கதறி அழுது மயங்கி விழுந்து விடுகிறார். உடனே அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துப் போக மறு பக்கம் ரஞ்சித்தின் அம்மா ரூமுக்கு வந்து கணவரிடம் பேசுகிறார்.

எல்லாமே அபசகுணமாக இருக்கு என்று சொல்லி, முதலில் நடந்த விஷயங்கள் முதற்கொண்டு அனைத்து விஷயங்களையும் சொல்ல இதை எல்லாம் அரிதா கேட்டுக் கொண்டிருக்கிறார். தொட்ட விஷயம் எல்லாமே தப்பா தான் இருக்கு என்று சொல்ல, இதையெல்லாம் என் தங்கச்சி கிட்ட சொல்ல வேண்டாம் என்று சொல்லுகிறார். இந்த கல்யாணத்தை நடத்தி தான் ஆக வேண்டுமா என்று கேட்ட, ஹரிதா என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க எல்லாமே தற்செயலா நடக்குது இதையெல்லாம் பெருசு படுத்த வேண்டாம் என்று சொல்ல சுந்தரவல்லி அண்ணனும் இதை வைத்து கல்யாணம் வேண்டாம் என்று முடிவு பண்ண வேண்டாம் என சொல்லி விடுகிறார். மறுபக்கம் சூர்யா தனியாக இருக்க நந்தினி பால் எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க சூர்யா வேண்டாம் என சொல்லுகிறார். நீ சாப்டியா என்று கேட்க, என்னால் எப்படி சாப்பிட முடியும் என்று நந்தினி சொல்லுகிறார். மனசுல எவ்வளவு வலி இருந்தாலும் என் மேல பாசத்தை மட்டும்தான் காட்டிருக்காரு என்று சொல்லுகிறார். ஏன் எல்லாமே தப்பா நடக்குதுன்னு தெரியல என்று சொல்ல, எல்லாமே கண்டிப்பா நல்லதா நடக்கும் என்று சூர்யாவிற்கு ஆறுதல் சொல்லுகிறார்.

மறுநாள் பத்திரிக்கையை செலக்ட் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். அப்போது ஹரிதா ஒரு டிசைனையும் மாதவி ஒரு டிசைனையும் சொல்ல கல்யாணம் பண்ணிக்க போறது சுரேகாவும் ரஞ்சித்தும் தான் அவங்களுக்கு புடிச்சதை செலக்ட் பண்ணட்டும் என்று சொல்லுகின்றன. ரஞ்சித் சுரேகா செலக்ட் பண்ணட்டும் என்று சொல்ல, இல்ல நான் மைண்ட்ல ஒண்ணு சூஸ் பண்ணி வச்சிருக்கேன் அதுவே ரஞ்சித் எடுக்கிறாரா பார்க்கலாம் என்று சொல்ல உடனே ரஞ்சித் இன்விடேஷன் பொறுப்பு சுரேகா கிட்ட விட்டு விடுகிறேன் அவ செலக்ட் பண்றது ஓகே என்று சொல்லுகிறார். ஆனால் ரெண்டு பேரும் சேர்ந்து தான் செலக்ட் பண்ணனும் என்று ஹரிதா சொல்லுகிறார். மறுபக்கம் போலீஸ்காரர்கள் வீட்டுக்கு வர கல்யாணம் வந்து விசாரிக்க அவரை உள்ளே அழைத்துவிட்டு நான் போய் அம்மாவ கூட்டிட்டு வரேன் என்று சொல்லுகிறார். பிறகு சுரேகாவும் ரஞ்சித்தும் சேர்ந்து ஒரே இன்விடேஷனை தொட அனைவரும் சந்தோஷப்பட கல்யாணம் போலீஸ் வந்திருக்கும் விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

moondru mudichu serial episode update
moondru mudichu serial episode update