‘சாவா’ படத்தை முந்தி, லாப சதவீதத்தில் முதலிடம் பெற்றது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’

Web Ads

நடப்பு ஆண்டான இந்த 2025- ம் ஆண்டில், கடந்த 6 மாதங்களில் வெளியான திரைப்படங்களின் கலெக்‌ஷன் ரிக்கார்டு பார்ப்போம்..

விக்கி கௌஷல், ரஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான ‘சாவா’ பாலிவுட் படம் 800 சதவீதம் லாபம் ஈட்டியிருக்கிறது. இருந்தாலும், இந்த ஆண்டில் அதிகபட்ச லாபம் ஈட்டிய படம் அபிஷன் ஜீவிந்தின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் தான் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

சசிகுமார், சிம்ரன் கணவன் மனைவியாக நடித்து வெளியான இப்படம் 7 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட இப்படம், இந்தியாவில் ரூ. 62 கோடியும், உலக அளவில் ரூ. 90 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கையில் இருந்து சென்னைக்கு வரும் குடும்பத்தை அக்கப் பக்கத்தினருக்கு பிடித்து விடுகிறது. அந்த நேரத்தில், சசிகுமார் குடும்பத்தில் பிரச்சினை வரவே அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாய் கதை விவரிக்கிறது.

ஆர்.எஸ். பிரசன்னா இயக்கத்தில் அமீர்கான் நடிப்பில் ஜூன் 20-ந்தேதி ரிலீஸான ‘சிதாரே ஜமீன் பர்’ படம் ரூ. 65 கோடி செலவில் எடுக்கப்பட்டது. அமீர்கான் தயாரித்த இப்படம் இதுவரை ரூ. 260 கோடி வசூல் செய்திருக்கிறது. அவ்வகையில், இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்தது ‘சாவா’ படம். ஆனால், லாப சதவீத விஷயத்தில் ‘சாவா’ படத்தை முந்தி விட்டது ‘டூரிஸ்ட் ஃபேமிலி’.

ரூ. 90 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ‘சாவா’ படம் உலக அளவில் ரூ. 808 கோடி வசூல் செய்தது. படத்தின் லாப சதவீதம் 800 தான். இதற்கிடையே, மோகன்லால், ஷோபனா சேர்ந்து நடித்த ‘துடரும்’ படம் 720 சதவீதம் லாபம் ஈட்டியது. 800 சதவீதம் என்பது குறைவு இல்லை. ஆனால், டூரிஸ்ட் ஃபேமிலி படம் ‘சாவா’ படத்தை விட 400 சதவீதம் அதிகம் லாபம் ஈட்டியிருக்கிறது. அதனால், அதற்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.

ஆக, பான் இந்தியா படம் எடுப்பது பெரிதல்ல, மக்களுக்கு பிடிக்கிற மாதிரி படம் எடுக்கிறதுதான் பெரிது.

tourist family tamil movie collection record
tourist family tamil movie collection record