ஆகாசசூரன்-பேரரசி கதாபாத்திரங்களில் வெளியான ‘தலைவன்-தலைவி’ டிரெய்லருக்கு வரவேற்பு..

பாண்டிராஜ் இயக்கத்தில் ‘ஆகாச சூரன்’ விஜய் சேதுபதி – ‘பேரரசி’ நித்யா மேனன் நடிப்பில் ‘தலைவன் தலைவி’ உருவாகியுள்ளது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் ஜூலை 25-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தை ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டு வரவேற்பு பெற்று வருகிறது.
விஜய் சேதுபதி – நித்யா மேனன் இருவருக்குமான திருமணம், ஊடல், காதல் ஆகியவைதான் படத்தின் கதைக்களம். என்பதை ட்ரெய்லர் காட்டுகிறது.
நீண்டநாட்களுக்குப் பிறகு சுவாரஸ்யத்தை தூண்டும் வகையில் ‘கட்’ செய்யப்பட்ட ஒரு ட்ரெய்லர். கலகலப்பு, எமோஷனல், காமெடி என ஒரு முழுமையாக ஃபேமிலி எண்டர்டெய்ன்மெண்ட் களத்துக்கான வாய்ப்பை கொண்ட படம் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது.
சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசையும், எம்.சுகுமாரின் ஒளிப்பதிவும் கவனம் ஈர்க்கும் பிற அம்சங்கள். குடும்ப சென்டிமெண்ட் படங்கள் இயக்குநர் பாண்டிராஜின் வலுவான களம் என்பதால், படத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது. முன்னதாக இவர் இயக்கிய ‘கடைக்குட்டி சிங்கம்’ படம் கவனம் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
