சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் ஷுட், மீண்டும் தொடங்கியது..

Web Ads

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘மதராஸி’ படத்தை தொடந்து சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் ‘பராசக்தி’. இதன் படப்பிடிப்புக்கு இடையே தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனையில் ஏற்பட்ட சிக்கலால் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. இதனை முன்வைத்து பல்வேறு தகவல்களும் வெளிவரத் தொடங்கின.

தற்போது டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இதனைத் தொடர்ந்து, அனைத்து நடிகர்களிடமும் தேதிகள் வாங்கப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு உள்ளது.

Web Ad 2

பொள்ளாச்சியில் இன்று தொடங்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சிவகார்த்திகேயன் சென்றிருக்கிறார். இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு ‘ஜனநாயகன்’ படத்துடன் இப்படமும் ரிலீஸாகிறது.

the shooting of parasakthi movie has begun in pollachi
the shooting of parasakthi movie has begun in pollachi