பிக்பாஸ் வீட்டில் மீண்டும் டைமண்ட் ஹீஸ்ட் டாஸ்க்! வைரத்தைத் திருடிய TTF வாசன்!

பிக்பாஸ் தமிழ் சீசன் 10 வீட்டில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘கிரேட் டைமண்ட் ஹீஸ்ட்’ டாஸ்க் மீண்டும் வந்துள்ளது. இந்த முறை வைரத்தைத் திருடி வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையே, வீட்டில் நடைபெறும் டான்ஸ் மரத்தான் டாஸ்க் போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்கியுள்ளது. மற்ற போட்டியாளர்கள் நடனத்தில் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில், ப்ரோமோவில் காட்டப்பட்டபடி TTF வாசன் அந்தச் சூழலைப் பயன்படுத்தி வைரத்தைத் திருடி மறைத்து வைக்கிறார்.
வாசனின் இந்தத் திட்டம் அவருக்கு வெற்றியைத் தேடித்தருமா? அல்லது மற்ற போட்டியாளர்கள் அவரது திருட்டைக் கண்டுபிடித்து விடுவார்களா? வைரத்தைத் திருடுவதில் யார் புத்திசாலித்தனமாகச் செயல்படப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

பரபரப்பும் எதிர்பாராத திருப்பங்களும் நிறைந்த பிக்பாஸ் வீட்டில், இந்த டைமண்ட் ஹீஸ்ட் டாஸ்க் அடுத்தகட்டமாக என்ன திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
