‘கூலி’ படத்தின் ‘பவர்ஹவுஸ்’ பாடல் வெளியீடு: 22-ந்தேதி பிரம்மாண்ட விழா..

Web Ads

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி வெளியாகிறது.

இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடலாக டி.ராஜேந்தர் மற்றும் தெருக்குரல் அறிவு பாடிய ‘சிக்கிட்டு’ வைப் பாடல் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. அப்பாடல் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து, கடந்த வாரம் ய செகண்ட் சிங்கிள் பாடலாக ‘மோனிகா’ என்கிற குத்துப் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டது. சுப்லாஷினி என்கிற இளம் பாடகி பாடிய இந்தப் பாடலுக்கு செளபின் சாஹிர் உடன் சேர்ந்து பூஜா ஹெக்டேவும் குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு கிடைத்துள்ளது.

அடுத்ததாக, இப்படத்தின் 3-வது பாடல் ரிலீசுக்கு தயாராகி உள்ளது. ‘பவர் ஹவுஸ்’ என பெயரிடப்பட்டுள்ள அப்பாடல் வருகிற ஜூலை 22-ந்தேதி ஐதராபாத்தில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அப்பாடலுக்காக அனிருத்தின் இசை நிகழ்ச்சியும் ஐதராபாத்தில் நடத்தப்பட இருக்கிறது.

இதில், கூலி பட பாடல்களை ரசிகர்கள் முன்னிலையில் லைவ் ஆக பர்பார்ம் செய்து காட்ட உள்ளார் அனிருத். இவ்விழாவில் நாகர்ஜுனா, லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

அனிருத் ஐதராபாத்தில் ‘கூலி’ பட இசை நிகழ்ச்சி நடத்த உள்ளதை அறிந்த ரசிகர்கள் இது காவ்யா மாறனுக்கு ‘பிடித்த சிட்டி’ என கமெண்ட் செய்து வருகின்றனர். இப்படத்தின் தயாரிப்பாளரான கலாநிதிமாறனின் மகள் காவ்யா மாறன். இவர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் என்கிற அணியை நிர்வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

coolie movie 3rd single will release on anirudh hyderabad concert

coolie movie 3rd single will release on anirudh hyderabad concert