ஆர்யாவின் 40-வது படத்திற்கு ஹலோ காதல் எனத் தலைப்பு?

Web Ads

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 40-வது திரைப்படத்திற்கு ‘ஹலோ காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நிகில் முரளி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இப்படத்தில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை, ஆர்யா தனது ‘தி ஷோ பீப்பிள்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார்.

Web Ad 2

ஆர்யாவின் 40-வது படமாக உருவாகும் இப்படத்தின் தலைப்பு குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ‘ஹலோ காதல்’ என்ற தலைப்பு குறித்து படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வேண்டியுள்ளது.