‘ரிஸ்க்’ எடுத்தால் முன்னேறலாம்: நடிகை சமந்தா பேச்சு, வைரல்..

Web Ads

பாலிவுட்டில் நடிகை சமந்தா கடைசியாக வருண் தவானோடு ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்கிற வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த ஆக்‌ஷன்-த்ரில்லர் சீரிஸ் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது.

இந்நிலையில், வாழ்க்கை-தன்னம்பிக்கை-ரிஸ்க்-மாற றம் என்றெல்லாம் தெரிவித்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்துப் பார்ப்போம்.

‘ரிஸ்க் எடுக்காமல் எந்த ஒரு மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. வாழ்க்கையிலும், தொழிலிலும் முன்னேற வேண்டும் என்றால், கம்ஃபோர்ட் ஜோன்ல இருக்கக் கூடாது. புதிதாக எதையாவது முயற்சிக்க வேண்டும். பயத்தை விட்டு விட்டு தைரியமாக சவால்களை எதிர்கொள்ள வேண்டும். எந்த ஒரு பெரிய சாதனையையும் அடைவதற்குப் பின்னால், ஏதோ ஒரு விதத்தில் ரிஸ்க் இருக்கும்’ என்றார்.

Web Ad 2

முன்னதாக சமந்தா, சாதாரண கதாநாயகி கேரக்டர் ரோல்களில் மட்டும் நடிக்காமல், ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் சீரிஸில் ‘ராஜி’ கேரக்டர், ‘ஓ பேபி’, ‘யசோதா’, ‘சகுந்தலம்’ என வித்தியாசமான கதைகளில் நடித்திருக்கிறார்.

இந்த மாதிரி கேரக்டர்கள்ல நடிக்கிறதும் ஒரு விதத்தில் ரிஸ்க் தான். அதனால், அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். நோயிலிருந்தும் நலமுடன் மீண்டு வந்திருக்கிறார்.

 actress amantha taking risks for meaningful change
actress amantha taking risks for meaningful change