கோடை காலத்தைக் கொண்டாட அடுத்தடுத்த வெளியாகும் படங்கள். நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங்.!

Web Ads

கோடை காலத்தைக் கொண்டாட அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது.

List of upcoming films to celebrate summer

List of upcoming films to celebrate summer

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படம் என்றாலே மிகுந்த வரவேற்பு கொடுப்பது முக்கியமான ஒன்று. அதிலும் குறிப்பாக வாராவாரம் தமிழ் படங்கள் வெளியாகி தான் வருகின்றன. அந்த வகையில் தற்போது கோடை காலம் தொடங்கி இருக்க அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்த இருக்கிறது.

நாளை முதல் அடுத்த மாதம் வரை வெளியாகும் படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சுந்தர் சி இயக்கத்திலும் வடிவேலு நடிப்பிலும் வெளியாக உள்ள திரைப்படம் “கேங்கர்ஸ்” இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

சிவா நடிப்பில் “சுமோ” என்ற திரைப்படம் வருகிற 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்திலும், சூர்யா நடிப்பிலும் உருவாகியுள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது அதே நாளில் சசிகுமார் சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள “டூரிஸ்ட் ஃபேமிலி”திரைப்படமும் வெளியாகிறது.

அதேபோல் சந்தானம் நடிப்பில் “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படமும் சூரி நடிப்பில் “மாமன்” திரைப்படம் வருகிற மே மாதம் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் “ஏஸ்” என்ற திரைப்படம் மே 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இது மட்டும் இல்லாமல் கமல்ஹாசன் நடிப்பிலும் மணிரத்னம் இயக்கத்திலும் உருவாகியுள்ள “தக் லைப்” திரைப்படம் ஜூன் ஐந்தாம் தேதி வெளியாக உள்ளது.

இந்தத் திரைப்படங்களின் லிஸ்டில் உங்களுடைய ஃபேவரைட் திரைப்படம் எது? நீங்க எந்த படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறீர்கள்? என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

List of upcoming films to celebrate summer

List of upcoming films to celebrate summer