ரேணுகா மீது வந்த சந்தேகம், கேள்வி மேல் கேள்வி கேட்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் சூர்யா தண்ணீர் குடிக்க ரூமுக்கு வர சூர்யாவும் நந்தினியும் மோதி விடுகின்றனர். முதல்ல இருந்த மாதிரி இப்போ இருட்டு தெரியல என்று சூர்யா சொல்ல அர்ச்சனா நந்தினி வீட்டு முன் காரில் உட்கார்ந்து இவ்வளவு நேரம் எப்படி சூர்யா உள்ள இருக்க வெளிய வாடா என்று யோசிக்கிறார். நந்தினி நீங்க வேணா வீட்டுக்கு போயிடுறீங்களா என்று கேட்க எதுக்கு நந்தினி என்னை தொரத்தரத்திலேயே இருக்க என்று சொல்ல எங்களுக்கு பழகிடுச்சு உங்களுக்கு பழக்கம் இல்ல இல்ல அதனால தான் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல என்று சொல்ல இருவரும் உட்கார்ந்து ஜாலியாக சிரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர். மறுபக்கம் அர்ச்சனா சூர்யா வெளியில் வராததால் டென்ஷனாகி ரேணுகாவிற்கு ஃபோன் போடுகிறார்.
நீ சூர்யா இந்த வீட்ல தானே தங்கி இருக்கான்னு சொன்ன இந்த ஏரியாவுல கரண்ட் ஆஃப் பண்ணி அவன் வெளியே வருவான்னு பாத்தா உள்ளவே இருக்கான், இப்போ உடனே வெளியே வரணும் அதுக்கு நீ கீழ போய் ஒரு விஷயத்தை செய்யணும் என போனில் சொல்லி வைக்க உடனே ரேணுகா இந்த வீட்டுக்கு வந்து இப்பதான் நான் பெரிய விஷயத்தை பண்ணப் போறேன் என்று சொல்லி போனை வைத்துவிட்டு. அருணாச்சலம் ரூம் முன் விளக்கில் இருக்கும் எண்ணெயை கீழே ஊற்றிவிட்டு திருடன் திருடன் என கத்த மாதவி அசோகன் சுரேகா மூவரும் வந்து எங்கே திருடன் என தேடிக் கொண்டிருக்க அருணாச்சலம் எண்ணெயில் காலை வைத்து சறுக்கி கீழே விழுந்து விடுகிறார். அருணாச்சலம் வலி தாங்க முடியாமல் இருக்க உடனே ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
ரேணுகா நந்தினிக்கு போன் போட்டு அருணாச்சலம் ஐயா கீழே விழுந்துட்டாரு என்று சொல்ல, நந்தினி பதறிப் போய் குடும்பத்தினரிடம் சொல்ல, சூர்யா டென்ஷனாகி டேடிக்கு என்ன ஆச்சு எப்படி விழுந்தார் என்று கேட்டுவிட்டு எந்த ஆஸ்பிட்டல் என்று கேட்டுவிட்டு சூர்யாவும் நந்தினியும் ஹாஸ்பிடலுக்கு வேக வேகமாக கிளம்பு அர்ச்சனாவும் அவர்களை பாலோ பண்ணி பின்னாலே செல்கிறார். உடனே அர்ச்சனா அவரது பிரண்டுக்கு போன் பண்ணி இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்கே இருப்பேன் வெளியே வா என கூப்பிடுகிறார்.
அருணாச்சலம் மருத்துவமனையில் அனுமதித்திருக்க அவரை டாக்டர் செக் பண்ணி பார்த்துக் கொண்டிருக்க சுந்தரவல்லி டென்ஷன் ஆக இருக்க மாதவி நீங்க டென்ஷன் ஆகாதீங்கமா எதுவும் அப்பாவுக்கு ஆகாது என்று சொல்ல டாக்டர் வந்து சொல்ற வரைக்கும் என்னால நிம்மதியா இருக்க முடியாது நீங்க சொல்லிக் கொண்டிருக்கும் அந்த நேரம் பார்த்து சூர்யாவும் நந்தினியும் ஹாஸ்பிடலுக்கு வருகின்றனர்.
சூர்யா பதறி அடித்துக்கொண்டு ஓடி வந்து டாடிக்கு என்ன ஆச்சு அவர் அசால்டா இருக்க மாட்டாரு என்ன பிரச்சனை என்று கேட்டுக் கொண்டிருக்க சுந்தரவல்லி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, மாதவி எங்களுக்கு எதுவும் தெரியாது டாக்டர் வந்தா தான் தெரியும் என்று சொல்கிறார் கொஞ்ச நேரத்தில் டாக்டர் வெளியே வந்து அவர் விழும்போது கையை கீழே ஊனி இருக்காரு அதனால கையில தசை புடிச்சிருக்கு அவ்வளவுதான் பயப்படும்படி எதுவும் இல்லை பிசியோதெரபி கொடுத்தால் சரியாகும் எதுவும் ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம் இன்னும் ஒரு மணி நேரத்தில் நீங்கள் கூட்டிட்டு போயிடலாம் என்று சொல்லுகிறார்.மாதவி நாங்க போய் பார்க்கலாமா என்று கேட்க ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு கொஞ்ச நேரம் கழிச்சு போய் பாருங்க என்று சொல்லிவிட்டு டாக்டர் சென்று விடுகிறார்.
மறுபக்கம் அர்ச்சனா பிரண்டை சந்தித்து உன்னுடைய பர்த்டே எப்போ என்று கேட்ட நெக்ஸ்ட் வீக் என்று சொல்லுகிறார். நான் எப்படி ஞாபகம் வச்சிருக்கேன் பாத்தியா நெக்ஸ்ட் வீக் நான் ஊர்ல இருக்க மாட்டேன். அதனால உனக்கு கிப்ட் கொடுக்க வந்தேன் என்று சொல்லி கையில் இருக்கும் மோதிரத்தை கழட்டி கையை காட்டு போட்டு விடுகிறேன் என்று சொல்லி கையை முறுக்கி விடுகிறார். உடனே உன்ன ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறேன் என்று சொல்லி அருணாச்சலம் இருக்கும் அதே ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறார்.
உடனே சுந்தரவல்லி குடும்பத்தின் முன் சென்று டாக்டர் இவளுக்கு கொஞ்சம் அடிபட்டுடுச்சு என்று எதுவும் தெரியாதது போல் பேச சுந்தரவல்லி அர்ச்சனா என கூப்பிடுகிறார் என்னை ஆண்ட்டி நீங்க எல்லாரும் இருக்கீங்க என்று கேட்ட அவருக்கு கொஞ்சம் அடிபட்டுருச்சு அதனால இங்க வந்திருக்கோம் என சொல்லுகிறார். அங்குளை பார்க்கலாமா என்று கேட்க நாங்களே இப்பதான் பாக்க போறோம் வாமா பார்க்கலாம் என அனைவரும் வந்து அருணாச்சலத்தை நலம் விசாரிக்க, நந்தினியும் விசாரிக்கிறார். நீ எதுக்குமா கஷ்டப்படுற என்று கேட்க சுந்தரவல்லி எல்லாம் இவளோட ராசி தான் இவ வந்ததிலிருந்து கஷ்டத்துக்கு மேல கஷ்டம் தான் என்று சொல்ல உடனே சூர்யா ஹாஸ்பிடல்னு பாக்குற டாடி என்று சொல்லுகிறார். உடனே நந்தினி ஹாஸ்பிடல் ஐயாவை சேர்த்து இருக்காங்கன்னு சொன்னதுக்கு அப்புறம் எப்படி நிம்மதியா இருக்க முடியும் அதனாலதான் வந்தேன் என்று சொல்லுகிறார்.
இப்போ உனக்கு நிம்மதியா இருக்கா என்று அசோகன் கேட்க சூர்யா முறைக்க அசோகன் அமைதியாகி விடுகிறார். மாதவி இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்கு போலாம்னு சொல்லி இருக்காங்க உங்களுக்கு ஓகேவா என்று கேட்க ஓகே தான் என்று சொல்ல நீங்க ஸ்ட்ரெயின் பண்ண கூடாது ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி இருக்காங்க என்று சுந்தரவல்லி சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து இந்த மருந்துகளை வாங்கிட்டு வரச் சொல்லி சீட்டு கொடுக்க நந்தினி வாங்குகிறார் உடனே சுந்தரவல்லி அசோகனிடம் அந்த சீட்டை வாங்கி போய் மருந்து வாங்கிட்டு வாங்க என்று அனுப்புகிறார். மறுபக்கம் நந்தினி குடும்பத்தினர் என்ன ஆயிருக்கும் என்று குழப்பத்தில் இருக்க நந்தினிக்கு ரஞ்சிதா போன் போடுகிறார். ஐயாவுக்கு ஒன்னும் இல்லல்ல என்று கேட்க, ஐயாவுக்கு கைல தான் அடிபட்டு இருக்கு வலி அதிகமா இருக்கும் போல என்று சொல்லிக் கொண்டிருக்க சிங்காரம் நீ அங்க தானமா போற அய்யாவ நல்லபடியா பார்த்துக்கோ என்று சொல்ல சரிப்பா நான் பாத்துக்குறேன் என்று சொல்ல வெளியில் வந்த சுந்தரவல்லி என்ன பாத்துப்ப என்ன பார்த்து கிழிப்ப என்று கேட்கிறார் இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சுந்தரவல்லி உட்கார்ந்து கொண்டிருக்க அருணாச்சலமும் சூர்யாவும் வந்து உட்காருகின்றனர் வலி இன்னும் இருக்காங்க என்று கேட்ட கொஞ்ச நேரம் இல்ல கொஞ்ச நேரம் வலிக்குது என்று சொல்லுகிறார். உங்கள தான் ஸ்டிரெயின் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க என்று சொல்ல நான் எதுவுமே பண்ணல சூர்யா தான் வேட்டி கூட கட்டி விட்டான் என்று சொல்லு அந்த நேரம் பார்த்து ரேணுகா காபி கொடுக்க வருகிறார் உடனே சூர்யா உங்களுக்கு இந்த அடி எப்படிப்பட்டது அந்த நேரத்தில் நீங்கள் எதுக்கு வெளியே வந்தீங்க என்று கேட்க ஏதோ சத்தம் கேட்டது அதனாலதான் வந்தேன் என சொல்லுகிறார்.
திருடன் வந்துட்டான்னு ரேணுகா கத்தினதினால் தான் வந்தேன் என்று சொல்ல சூர்யா எழுந்து திருடன் வந்தானா என்ன என்று கேட்க ஆமா சார் என்று சொல்லுகிறார். இவ திருடன் கத்துனது உங்களுக்கு மட்டும் தான் கேட்டுச்சா என்று சொல்ல உடனே ரேணுகா திருடன் வந்த பயத்துல அய்யாவோட ரூம் முன்னாடி நின்னு கத்துனதுனால கேட்டுர்க்கும் என்று சொல்ல அப்போ ரூம்ல நீங்க மட்டும் தான் இருந்திங்களே டாடி என்று கேட்கிறார். சரி அது விடுங்க ரெண்டு திருடன் வந்திருக்காங்க அப்ப நீ என்ன பண்ணிக்கிட்டு இருந்த என்று கேட்க தண்ணி குடிக்க வந்தேன் என்று சொல்லுகிறார். அப்போ டாடி எப்படி விழுந்தார்ன்னு சொல்லவே இல்லையே என்று சொல்ல அருணாச்சலம் கீழே எண்ணெய் கொட்டி இருந்ததுடா என்று சொல்லுகிறார் அப்ப எண்ணெய் கொட்டினது எப்படின்னு உனக்கு தெரியாதா என்று கேட்க திருடனுங்க தட்டி விட்டுட்டானுங்க என்று சொல்ல,அப்போ திருடன் தட்டி விட்டதுல டாடி விழுந்துட்டார் அப்படித்தானே என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
