உடல்நிலை குறித்து பரவும் வதந்தி.. குக் வித் கோமாளி பவித்ரா கொடுத்த விளக்கம்..!

உடல்நிலை குறித்து பரவி வரும் வதந்திக்கு குக் வித் கோமாளி பவித்ரா விளக்கம் கொடுத்துள்ளார்.

cook with comali pavithra share health issue

cook with comali pavithra share health issue

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இவர் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

இது மட்டுமில்லாமல் ஓகே கண்மணி, நாய் சேகர் போன்ற படங்களிலும் நாயகியாக நடித்துள்ளார். சமீபத்தில் பவித்ரா மிகவும் உடல் மெலிந்து மோசமான நிலையில் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகிய இருந்தது.

இதனால் ரசிகர்கள் பலரும் பவித்ராவிற்கு என்ன ஆச்சு? என்ற கேள்வியை எழுப்பி வந்திருந்தனர். இது மட்டும் இல்லாமல் சிலர் வதந்திகளையும் பரப்பி வந்தனர் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பவித்ரா instagram-ல் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

அதாவது என் உடல் எடை குறித்து பல்வேறு பொய்யான தகவல்கள் பரவி வருகிறது இதற்கு என் தரப்பில் இருந்து விளக்கங்கள் கொடுத்தாலும் நிற்கவில்லை.நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து இருக்கிறேன், நான் அதை செய்திருக்கிறேன், இதை செய்திருக்கிறேன் என்று வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இது மட்டுமில்லாமல் சில கமெண்ட்கள் உணர்ச்சியற்றதாக இருக்கிறது. அதை நான் என்னவென்று குறிப்பிடவில்லை நான் சீரியஸான உடல்நல பிரச்சனையில் இருக்கிறேன் தற்போது அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வருகிறேன் உண்மையிலேயே என் மீது கரிசனமும் அன்பும் கொண்டு என்னைப் பற்றி விசாரித்தவர்களுக்கு நன்றி மீடியாக்களும் ஊடகங்களும் தவறான செய்திகளை என்னை பற்றி பரப்ப வேண்டாம் நானும் என் எதிர்காலத்தை வழிநடத்த வேண்டும் வதந்திகளை பரப்பி என்னுடைய கடினமான சூழ்நிலையை மேலும் கடினம் ஆக்கி விடாதீர்கள்.

இவ்வளவு நாள் நீங்கள் எனக்கு கொடுத்த அன்பை மாற்றாதீர்கள், விரைவில் மீண்டு வருவேன் என்று பதிவிட்டு இருக்கிறார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.