ரஜினியின் ‘கூலி’ படத்தில் இருந்தும் ஸ்ருதிஹாசன் விலகுகிறாரா?: டோன்ட் வொரி லோகி சார்..

நடிகை ஸ்ருதிஹாசன் பல மொழிகளில் நடித்தாலும், திடீரென விலகி விடுவது சாதாரணமாகி விட்டது. அதற்கான காரணம் என்ன என்பதையும் தெரிவிக்காமல் செலவது வாடிக்கையாகி விட்டது.
இதனால், கூலி பட இயக்குனர் சற்று குழப்பத்துடன் ஷூட் செய்கிறாரோ? விஷயத்திற்கு வருவோம் வாங்க..
ஸ்ருதி ஹாசன் கடைசியாக தெலுங்கில் பிரபாஸுடன் ‘சலார்’ படத்தில் நடித்திருந்தார். 30 வயதை கடந்த பின்னரும், தெலுங்கில் இவருக்கு மார்க்கெட் பீக்கில் உள்ளது. மேலும் தற்போது தமிழிலும் ரஜினிகாந்த் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
இந்நிலையில், ஸ்ருதி ஹாசன் டோலிவுட் நடிகர் அடிவி சேஷ் ஜோடியாக ‘டெக்காய்ட்’ என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருந்தார். கடந்த ஆண்டு இந்த படம் துவங்கப்பட்ட போது, டீசரில் ஸ்ருதிஹாசன் பெயர் புகைப்படத்துடன் இடம்பெற்றிருந்தது.
உணர்ச்சிபூர்வமான காதல் கதையாக இந்த படத்தை உருவாக்க படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், இந்த படத்திலிருந்து திடீரென ஸ்ருதி ஹாசன் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்திலிருந்து ஸ்ருதி விலகியதால், காரணம் குறித்த முழுமையான தகவல் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், கதையில் நேர்ந்த மாற்றம் காரணமாக ஸ்ருதி ஹாசன் விலகியதாக கூறப்படுகிறது.
அவரது கதாபாத்திரம் உருவாக்கப்படும் விதம் ஸ்ருதிக்கு பிடிக்கவில்லை என டோலிவுட் திரையுலகில் கூறப்படுகிறது. டெக்காய்ட் படக்குழுவும் ஸ்ருதி ஹாசன் விலகுவதை உறுதி செய்துள்ளது.
மறுபுறம், சென்னை ஸ்டோரி என்ற படத்திலிருந்தும் ஸ்ருதி விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ருதி ஹாசன் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை விட்டு ஏன் விலகினார் என்பது தெரியவில்லை.
மேலும், இவரின் கைவசம் தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் நடித்து வரும் கூலி படம் மட்டுமே உள்ள நிலையில், இந்த படத்தில் இருந்தும் அவர் விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், லோகேஷ் சிறு கலக்கத்தில் உள்ளதாக திரைத்துறை பறவைகள் தகவல் தெரிவிக்கின்றன.
டோன்ட் வொரி லோகி சார்.. இது, தலைவரோட படம்; ஸ்ருதி படமல்ல.. என ரசிகர்கள் இணையத்தில் வரிசை கட்டி வருகின்றனர்.

rajinikanth in coolie movie; actress shruti haasan acting cancel?
