கோட், வேட்டையன் பட சாதனையை ‘கங்குவா’ முறியடிப்பு: எப்படி தெரியுமா?

திரைத்துறையில் வசூலை பொறுத்தவரை, நேற்றைய திரைப்படத்தை இன்றைய திரைப்படம் முறியடிப்பதும், இன்றைய திரைப்படத்தை நாளைய திரைப்படம் முறியடிப்பதும் தொடரும் நிகழ்வுதான். அவ்வகையில், ‘கங்குவா’ புரிந்த சாதனை பற்றி பார்ப்போம்..வாங்க..

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா, முதன்முறையாக வரலாற்று கதையம்சம் கொண்ட படமாக கங்குவாவை இயக்கி உள்ளார். சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானியும், வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதில் அனைத்து மொழிகளுக்குமே சூர்யாவின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்த உள்ளனர்.

கங்குவா படத்தின் ரிலீசுக்கு இன்னும் 3 வாரங்கள் உள்ள நிலையில், அப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன.

முதற்கட்டமாக வட மாநிலங்களில் அப்படத்தின் புரமோஷனை தொடங்கிய சூர்யா, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார்.

அடுத்ததாக ஆந்திராவுக்கு வந்த அவர் அங்கு தெலுங்கு புரமோஷனில் கலந்துகொண்டார். இதுமட்டுமின்றி பாலகிருஷ்ணாவின் அன்ஸ்டாப்பபில் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

குறிப்பாக, இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 2 ஆயிரம் கோடி வசூலிக்கும் என எதிர்பார்ப்பதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவே கூறி இருந்தார். படம் பார்த்தவர்களும் படத்தை பற்றி பிரம்மித்து கூறி இருந்தார்கள்.

இந்த நிலையில், கங்குவா திரைப்படம் ரிலீசுக்கு முன்பே விஜய், ரஜினி படத்தின் சாதனை ஒன்றை முறியடித்துள்ளது. தெலுங்கு மாநிலங்களில் விஜய், ரஜினி போன்ற நடிகர்களுக்கு மவுசு அதிகம் இருக்கும்.

இதை கருத்தில் கொண்டு விஜய்யின் கோட் பட தெலுங்கு ரிலீஸ் உரிமை ரூ.17 கோடிக்கும், ரஜினியின் வேட்டையன் பட தெலுங்கு உரிமை ரூ.16 கோடிக்கும் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இந்த இரண்டு படங்கள் தான் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் தெலுங்கு உரிமை அதிக தொகைக்கு விற்பனை செய்யப்பட்ட படமாகும்.

இதை முறியடிக்கும் விதமாக, தற்போது கங்குவா படத்தின் தெலுங்கு உரிமை ரூ.25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோட் மற்றும் வேட்டையன் பட சாதனையை கங்குவா படம் முறியடித்துள்ளது.

தளபதி-69, கூலி திரைப்படம் வரட்டும், அப்ப பார்க்கலாம்..!

coat, and vettaiyan movies; in record break collection movie kanguva..
coat, and vettaiyan movies; in record break collection movie kanguva..