தீபாவளிக்கு நடிகை த்ரிஷா விடுத்த வேண்டுகோள்!

Web Ads

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, ஆதரவற்ற விலங்குகளுக்கு உதவும் வகையில் நடிகை த்ரிஷா ஒரு சிறப்பான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர், ஆதரவின்றி மீட்கப்பட்ட ஒரு நாயின் உணவுச் செலவை இந்தத் தீபாவளிக்கு ஏற்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், வெறும் ரூ.1,000 வழங்கினால், மீட்கப்பட்ட ஒரு நாய்க்கு ஒரு மாதம் முழுவதும் உணவு வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், ரசிகர்களும் தன்னுடன் இணைந்து தலா ரூ.1,000 வழங்கி, ஆதரவற்ற நாய்களின் உணவுச் செலவுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

Web Ad 2

இதற்காக ப்ளூ கிராஸ் ஆஃப் இந்தியா (Blue Cross of India) அமைப்புக்கு நன்கொடை வழங்குமாறும், இந்தத் தீபாவளியை ஆதரவற்ற நாய்களுக்கும் மகிழ்ச்சியான பண்டிகையாக மாற்றுவோம் என்றும் நடிகை த்ரிஷா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.