பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு – மனம் திறந்த ‘சண்டியர்’ பட இயக்குநர் அருண்குமார்!

Web Ads

நடிகர் கமல்ஹாசன் மீண்டும் ‘சண்டியர்’ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தை இயக்கும் இயக்குநர் அருண்குமார் தனது மகிழ்ச்சியை அறிக்கையாகப் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது அனைத்துப் படைப்புகளிலும் தான் அறிந்தும் அறியாமலும் ஒரு உன்னத கலைஞனின் தாக்கம் இருந்து வந்துள்ளதாகவும், அந்தத் தாக்கங்கள் தனது படைப்புகளை மேலும் செழுமைப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “சில துளி அமிர்தத்தை மட்டுமே சுவைத்துக் கொண்டிருந்த எனக்கு, பாற்கடலில் மிதக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இன்று அந்த உன்னத மகா கலைஞர் கமல்ஹாசனுடன் கைகோர்த்து நிற்கிறேன். என்னை இயக்குநராகத் தேர்ந்தெடுத்து, எனது கதைக்கு உயிரூட்டிய எனது மானசீக ஆசானை இயக்குவதோடு, இந்தப் பயணத்தில் இன்னும் நிறைய கற்றுக்கொள்ளப் போகிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி” என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Web Ad 2

இந்தப் பெருங்கனவை நனவாக்க உதவிய மகேந்திரன் மற்றும் தனது நண்பர் டிஸ்னி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், தனது குழுவினருடன் இணைந்து முழு உழைப்பையும் அர்ப்பணித்து, ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரைப்படத்தை வழங்குவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.

கமல்ஹாசனை இயக்கும் வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் இயக்குநர் அருண்குமார் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை தற்போது கவனம் பெற்றுள்ளது.