இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அரசியல்? டாக்டர் கிருஷ்ணசாமிக்கு இயக்குநர் அமீர் கேள்வி!

Web Ads

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான ‘விருமாண்டி’ திரைப்படம் முதலில் ‘சண்டியர்’ என்ற பெயரில் உருவாக்கத் திட்டமிடப்பட்டது. அப்போது படத்தின் தலைப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து, படத்தின் பெயர் மாற்றப்பட்டது.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ‘சண்டியர்’ என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பை நடத்த விடமாட்டேன் என்றும், தென் மாவட்டங்களில் கலவரம் ஏற்படும் என்றும் புதிய சர்ச்சையை டாக்டர் கிருஷ்ணசாமி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக இயக்குநர் அமீர் தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் கடுமையான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

Web Ad 2

அதில், “’சண்டியர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்த விடமாட்டேன் என்றும், தென் மாவட்டங்களில் கலவரம் ஏற்படும் என்றும் யாரை அச்சுறுத்தப் பார்க்கிறார் டாக்டர் கிருஷ்ணசாமி? இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இந்த அரசியலைச் செய்யப் போகிறீர்கள்? போதும், நிறுத்துங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இயக்குநர் அமீரின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.