நான் ஏன் சினிமாவிற்கு வந்தேன் தெரியுமா?: விஜய் சேதுபதி ஓபன் டாக்..

Web Ads

தமிழ் சினிமாவில், பல படங்களில் வில்லனாகவும், சிறப்புத் தோற்றத்திலும் நடித்து வந்த விஜய் சேதுபதி, இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பதாக முடிவெடுத்திருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர், ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என முடிவெடுத்த பிறகு அவரது நடிப்பில் வெளியான மகாராஜா, மற்றும் ‘தலைவன் தலைவி’ ஆகிய படங்கள்வசூலில் சாதனை செய்து வருகின்றன. இந்நிலையில் விஜய் சேதுபதி கூறியதாவது,

Web Ad 2

‘நான் எல்லா வேலைகளையும் செய்து பார்த்தேன். எதுவும் சரியாகக் கைகூடவில்லை. துபாயில் வேலை செய்துகொண்டிருந்தபோது அதிக சம்பளம் கிடைக்கும் என ஆப்கானிஸ்தான் செல்ல முயற்சித்தேன். பின், சென்னை வந்து சில வேலைகளைச் செய்தேன்.

பின், சினிமாவுக்குப் சென்றால் நல்ல வருமானம் கிடைக்கும் என நடிப்பைக் கற்றுக்கொள்ள கூத்துப்பட்டறை சென்றேன். ஆனால், அங்கு கணக்காளர் பணிதான் கிடைத்தது. அங்கிருந்தே சில விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். மாதம் ரூ.1 லட்சம் சம்பாத்தித்தால் போதும் என்கிற ஆசையால்தான் சினிமாவுக்கு வந்தேன்’ என்றார். தற்போது அவரது இந்த தகவல் வைரலாகி வருகிறது .

why did you come to cinema actor vijay sethupathi
why did you come to cinema actor vijay sethupathi