சிம்பு-வெற்றிமாறன் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட ‘வடசென்னை’ படம் உருவாகுமா?

வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென சிம்பு கூட்டணியில் ஒரு படம் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இப்படத்தின் ப்ரோமோ ஷூட் நடைபெற்றது. விரைவில் இப்படத்தின் ப்ரோமோ வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் கைவிடப்பட இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
தற்போது சிம்பு -வெற்றிமாறன் திரைப்படத்தின் செட் ஒர்க் நடைபெற்று வருகின்றது. இன்னும் சில தினங்களில் அந்த செட் ஒர்க் முடிவடைந்து, ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் இருந்து இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் தகவல்கள் வந்துள்ளது.
கடந்த பல ஆண்டுகளாகாவே சிம்பு-வெற்றிமாறன் கூட்டணி இணைவதாக இருந்து, தள்ளிக்கொண்டே போனது. தற்போது தான் இவர்கள் இருவரின் கூட்டணியிலும் ஒரு படம் தயாராக இருக்கின்றது.
எனவே, சிம்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் மொத்த ரசிகர்களும் இப்படத்தை எதிர்பார்த்து இருக்கின்றனர். அதுவும், இப்படம் வடசென்னை யூனிவெர்சில் தயாராக இருப்பதாக வந்த தகவல் எதிர்பார்ப்புகளை இரட்டிப்பாக்கி உள்ளது.
இப்படமும் வடசென்னை உலகில் தான் தயாராகின்றது என வெற்றிமாறன் அறிவித்து இருக்கின்றார். முன்னதாக, தனுஷ் நடித்த ‘வடசென்னை’ படத்தில் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அப்போது சிம்புவால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் விரைவில் இப்படத்தின் ப்ரோமோவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
